close
Choose your channels

ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ்பாபு ரிலீஸ் தேதி அறிவிப்பு

Friday, February 24, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பிரின்ஸ் மகேஷ்பாபு நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை இயக்குனர் முருகதாஸ் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்
இந்த படம் வரும் ஜூன் மாதம் 23ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதே நாளில்தான் அஜித்தின் 'விவேகம்' ரிலீஸ் ஆக இருந்து பின்னர் அது தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.
மகேஷ்பாபுவின் முதல் நேரடி தமிழ்ப்படமான இந்த படத்தில் ராகுல்ப்ரித்திசிங், எஸ்.ஜே.சூர்யா உள்பட பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையத்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர்பிரசாத் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.
ரம்ஜான் திருநாள் விடுமுறை தினத்தில் ரிலீஸ் ஆகும் இந்த படத்திற்கு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.