close
Choose your channels

சச்சின் தெண்டுல்கருடன் இணையும் ஆஸ்கார் நாயகன்

Monday, April 11, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கரையும், ஆஸ்கார் விருது வாங்கி இந்தியாவுக்கே பெருமை சேர்ந்த ஏ.ஆர்.ரஹ்மானையும் பிடிக்காத இளைஞர்கள் இருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் இந்த இரண்டு மாமேதைகளும் இணைந்தால் எப்படி இருக்கும். ஆம் அதிசயமாக தற்போது இணைந்துள்ளனர்.

சச்சின் தெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான Sachin: A Billion Dreams' என்ற திரைப்படத்தில் சச்சினே நடித்துள்ளார். இந்த படத்திற்கு நமது ஆஸ்கார் நாயகன் ரஹ்மான் தான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த திரைப்படம் வரும் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு சாதனை இந்தியர்கள் ஒன்றிணைந்துள்ள இந்த படம் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.