close
Choose your channels

பிரபல ஓவியர் வீரசந்தானம் காலமானார்

Friday, July 14, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல ஓவியரும் தமிழ் பற்றாளருமான வீர்சந்தானம் நேற்றிரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 71. மூச்சுத்திணறல் காரணமாக அவர் மரணம் அடைந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளார்.

சிறந்த ஓவியராக மட்டுமின்றி தமிழ் இனத்தின் மீது மிகப்பெரிய பற்று வைத்திருந்தவர் வீர சந்தானம். மும்பையில் உள்ள ஒரு நிறுவனத்தில் மிகப்பெரிய சம்பளத்தில் டிசைனராக இருந்த வீரசந்தானம், தமிழ் மக்களுக்காக போராட வேண்டும் என்பதற்காகவே வேலையை விட்டுவிட்டு தமிழகம் திரும்பியவர்.

தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ஈழத்தமிழர்களுக்கான இவர் வரைந்த ஓவியம் மிகவும் பிரபல்யம். டாஸ்மாக்கை இழுத்து மூடி தமிழ் மக்களை குடிப்பழக்கத்தில் இருந்து போக்க வேண்டும் என்பதே அவரது கனவாக இருந்தது. தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளை மக்களே அடித்து நொறுக்கு மூடுவதற்கு முன் அரசே மூட முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தவர் வீரசந்தானம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.