close
Choose your channels

விஷால்-கார்த்திக் கூட்டணியில் இணைந்த பிரபல தயாரிப்பாளர்-நடிகர்

Sunday, May 7, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நீண்ட இடைவெளிக்கு பின்னர் பிரபுதேவா இயக்கும் 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' திரைப்படத்தில் விஷால் மற்றும் கார்த்தி இணைந்து நடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த படத்தில் கிடைத்த சம்பள பணம் முழுவதையும் இருவரும் நடிகர் சங்க கட்டிட நிதிக்கு கொடுத்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்தது.

விஷால், கார்த்தி முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் 'வனமகன்' நாயகி சாயிஷா நாயகியாகவும் இன்னொரு முக்கிய வேடத்தில் ஆர்யாவும் நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு வெகுவிரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தின் வியாபரமும் தொடங்கிவிட்டது. ஆம், பிரபல நடிகரும் தயாரிப்பாளரும் விநியோகிஸ்தருமான அருண்பாண்டியனின் AP குரூப் நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு இந்த படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்தின் கதையை மறைந்த இயக்குனர் கே.சுபாஷ் எழுதியிருக்க, அதற்கு திரைக்கதை, வசனம் எழுதி பிரபுதேவா இயக்குகிறார். மூன்று முன்னணி நாயகர்கள், பிரபுதேவாவின் ரீஎண்ட்ரி இயக்கம், படப்பிடிப்பிற்கே முன்பே வெளிநாட்டு உரிமை ரிலீஸ் வியாபாரம், ஆகியவை இந்த படத்தின் எதிர்பார்ப்பை பலமடங்கு அதிகரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.