close
Choose your channels

ராம்சரணுக்கு வில்லனாக மாறிய அஜீத் வில்லன்

Monday, July 13, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜீத் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில் வில்லனாக நடித்து மிரட்டிய அருண்விஜய், தற்போது 'வா டீல்' படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அந்த படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து காத்திருக்கின்றார். இந்நிலையில் அவர் மீண்டும் ஒரு படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


ராம்சரண் தேஜா நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத தெலுங்கு படம் ஒன்றில் வில்லனாக நடிக்க ஒரு வித்தியாசமான நடிகரை தேர்வு செய்ய முடிவு செய்திருந்த அந்த படத்தின் இயக்குனர் ஸ்ரீனு வைத்லா, அருண்விஜய்யின் மிரட்டலான நடிப்பை 'என்னை அறிந்தால்' படத்தில் சமீபத்தில் பார்த்து, அவர்தான் தனது படத்தின் வில்லன் என்பதை முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

'என்னை அறிந்தால்' படம் போலவே இந்த படத்திலும் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தும் காட்சிகள் அதிகம் இருப்பதால், வில்லனாக மீண்டும் நடிக்க அருண்விஜய் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.