close
Choose your channels

ஆர்யாவின் 'இஞ்சி இடுப்பழகி' சென்சார் தகவல்கள்

Friday, November 20, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'இஞ்சி இடுப்பழகி' என்ற பெயரில் தமிழிலும், 'சைஸ் ஜீரோ' என்ற பெயரில் தெலுங்கிலும் ஆர்யா, அனுஷ்கா நடித்த திரைப்படம் வரும் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்று இந்த படம் தணிக்கை அதிகாரிகளால் சென்சார் செய்யப்பட்டது. தணிக்கை அதிகாரிகள் இந்த படத்திற்கு U/A சர்டிபிகேட் கொடுத்துள்ளனர்.

இந்த படத்தின் சென்சார் முடிந்துவிட்டதால் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக இன்னும் சில மணி நேரங்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் முக்கிய அம்சமாக அனுஷ்கா உடல் எடையை அதிகரித்து நடித்ததாக கூறப்படும் அதே வேளையில் இந்த படத்தில் நாகார்ஜூனா, ஜீவா, பாபிசிம்ஹா, ராணா, தமன்னா, காஜல் அகர்வால், ஹன்சிகா மற்றும் ரேவதி ஆகியோர் சிறப்பு தோற்றங்களில் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிவிபி நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை பிரகாஷ் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு பாகுபலி இசையமைப்பாளர் எம்.எம்.கீரவானி இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.