close
Choose your channels

'சைஸ் ஜீரோ'வில் ஆர்யா-அனுஷ்காவின் லிப் லாக்?

Thursday, July 9, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அனுஷ்கா நடித்த பாகுபலி, ருத்ரம்மாதேவி என அடுத்தடுத்து இரண்டு பிரமாண்டமான மற்றும் அனுஷ்காவின் கம்பீரமான நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் வெளியாகவுள்ள நிலையில் அனுஷ்காவின் ஹாட் ரொமான்ஸ் படம் ஒன்று விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. ஆர்யாவுடன் அனுஷ்கா நடித்து வரும் 'சைஸ் ஜீரோ' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்ததாகவும், இந்த படப்பிடிப்பில் ஆர்யா-அனுஷ்கா லிப்லாக் காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தென்னிந்திய திரையுலகில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் அனுஷ்கா, பிரபல ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்கி வருகிறார். மன்னர் கால படத்தில் இருந்து விலகி, சற்று வித்தியாசமாக கேரக்டரில் சைஸ் ஜீரோ' படத்தில் நடித்து வரும் அனுஷ்கா, இந்த படத்தில் தனது உடலை சைஸ் ஜீரோவாக மாற்ற முயற்சி செய்வதும், அதற்காக ஆர்யாவிடம் பயிற்சி எடுக்கும்போது காதலில் விழுவதும் அதன் பின்னர் நடைபெறும் சுவையான சம்பவங்கள்தான் படத்தின் கதை என கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தை பிரபல இயக்குனர் கே.ராகவேந்திர ராவ் அவர்களின் மகன் பிரசாத் இயக்கி வருகிறார். இவருடைய மனைவி கனிகா, இந்த படத்திற்கு வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்யா, அனுஷ்கா, சோனல் செளஹான், ஊர்வசி மற்றும் பலர் நடித்து வரும் இந்த படத்தில் நாகார்ஜுனன் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகிய இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். ஆர்யா-அனுஷ்கா நடித்த 'இரண்டாம் உலகம்' படத்தை தயாரித்த பிவிபி நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு எம்.எம்.கீரவானி இசையமைத்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.