close
Choose your channels

ராகவா லாரன்ஸ், தனுஷூடன் இணைந்த ஆர்யா

Monday, March 13, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் நடிகரான ஆர்யா நடித்த படங்கள் கடந்த சில ஆண்டுகளாக வெற்றிக்கனியை பறிக்காத நிலையில் அவர் மிகவும் நம்பியிருக்கும் படம் 'கடம்பன்'. இந்த படத்திற்காக உடல் எடையை ஏற்றியும், பல ரிஸ்க்குகள் எடுத்தும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
'கடம்பன்' திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகவுள்ளது. இந்த தகவலை ஆர்யா தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.
ஏற்கனவே தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் தனுஷ் இயக்கத்தில் உருவான 'பவர்பாண்டி' மற்றும் ராகவா லாரன்ஸ் நடித்த 'சிவலிங்கா' ஆகிய படங்கள் வெளியாகவுள்ள நிலையில் தற்போது ஆர்யாவின் 'கடம்பன்' திரைப்படமும் இந்த போட்டியில் இணைந்துள்ளது.
ஆர்யா, கேதரின் தெரசா, மதுவந்தி, ஒய்.ஜி.மகேந்திரா, சூப்பர் சுப்பராயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை 'மஞ்சப்பை' பட புகழ் ராகவா இயக்கியுள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
தமிழ்ப்புத்தாண்டில் ரிலீஸ் ஆகும் இந்த படம் வெற்றி பெற்று ஆர்யாவின் திரையுலக வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.