close
Choose your channels

ஆர்யா 'பெரிய தல'- நான் 'சின்ன தல' யட்சன் இசைவிழாவில் கிருஷ்ணா பேச்சு

Tuesday, August 4, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆர்யா, கிருஷ்ணா இணைந்து நடித்த 'யட்சன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அஜீத் நடித்த பில்லா, ஆர்யா நடித்த பட்டியல், அஜீத், ஆர்யா இணைந்து நடித்த 'ஆரம்பம்' போன்ற படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கிருஷ்ணா பேசியபோது, 'இந்த படத்தின் படப்பிடிப்பின்போது ஆர்யா என்னை அடிக்கடி 'சின்னத்தல' என்றே அழைத்து கொண்டிருப்பார். எனது அண்ணன் தல அஜீத்தை வைத்து படம் எடுப்பார், அல்லது ஆர்யாவை வைத்து படம் எடுப்பார். அல்லது இரண்டு பேரையும் சேர்த்து படம் எடுப்பார். இந்த படத்தில் அஜீத் இடத்தை ஆர்யா பிடித்துள்ளதால், ஆர்யா இடத்தை நான் பிடித்துள்ளேன். அதனால் இந்த படத்தை பொறுத்தவரை ஆர்யா பெரிய தல' நான் சின்னத்தல' என்று வேண்டுமானால் வைத்து கொள்ளலாம்' என்று கூறினார்.

யுவன்ஷங்கர்ராஜாவின் இசையில் அமைந்த இந்த படத்தில் ஆர்யா, கிருஷ்ணா ஆகியோரோடு தீபா சந்நிதி, ஸ்வாதி ரெட்டி, கிஷோர், ஒய்.ஜி.மகேந்திரா, தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். எஸ்.ஜே.சூர்யா இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். பிரபல எழுத்தாளர்கள் சுபா திரைக்கதை எழுதியுள்ள இந்த படத்தை யூடிவி நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.