close
Choose your channels

ஆர்யாவின் VSOP-க்கு 'U' சர்டிபிகேட்

Thursday, July 30, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'ஆர்யாவின் 25வது படமான 'வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க' படத்தின் பாடல்கள் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று இந்த படத்தை சென்சார் அதிகாரிகள் பார்த்து, படத்திற்கு 'U' சர்டிபிகேட் கொடுத்துள்ளனர். இதனால் தமிழக அரசின் வரிச்சலுகை கிடைக்க வாய்ப்புள்ளது என்பதால் ஒரு தயாரிப்பாளராக ஆர்யா மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.

நேற்று இந்த படத்தின் பாடல்கள் வெளியானதோடு, படத்தின் இரண்டு நிமிட டிரைலரும் வெளியாகியுள்ளது. டிரைலரில் இடம்பெற்றுள்ள ஆர்யா, சந்தானம், தமன்னா ஆகிய மூவரும் ஒருவரை ஒருவர் கலாய்த்து கொள்ளும் காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதோடு, சமூக வலைத்தளங்களில் நல்ல விமர்சனங்களையும் பெற்றுள்ளது. தமன்னா இந்த படத்தில் முதன்முதலாக ஒரு முழுநீள நகைச்சுவை படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்சார் சர்டிபிகேட் கிடைத்துவிட்டதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 14 என படக்குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர். ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டர்களும் இன்றைய செய்தித்தாள்களில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்யா, சந்தானம், தமன்னா, தாமிரபரணி பானு, கருணாகரன், வித்யூலேகா ராமன், ரேணுகா, வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகியோர்கள் நடித்துள்ள இந்த படத்தில் ஆர்யாவின் நெருங்கிய நண்பரான விஷால் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். டி.இமான் இசையமைத்துள்ல இந்த படத்தை எம்.ராஜேஷ் இயக்கியுள்ளார். நீரவ் ஷா, ஒளிபதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்திற்கு இணையாக ஒரு நகைச்சுவை விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.