close
Choose your channels

'கருப்பு ராஜா வெள்ளை ராஜா'வில் விஷால்-கார்த்தியுடன் இணையும் இன்னொரு தமிழ் ஹீரோ

Tuesday, May 2, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் இரண்டு முன்னணி ஹீரோக்கள் இணைந்து நடிப்பது என்பதே எப்போதாவது நடைபெறும் சம்பவமாக இருக்கும். இந்நிலையில் சமீபத்தில் 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' என்ற படத்தில் விஷால் மற்றும் கார்த்தி இணைந்து நடிப்பதாக வெளிவந்த செய்தியை பார்த்தோம். மறைந்த இயக்குனர் சுபாஷின் திரைக்கதையில் அமைந்த இந்த படத்தை பிரபுதேவா இயக்கவுள்ளார். இந்த படத்தில் ஜெயம்ரவியின் 'வனமகன்' படத்தின் நாயகி சாயிஷா ஷெகல் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தில் இன்னொரு முன்னணி ஹீரோவான ஆர்யாவும் தற்போது முக்கிய கேரக்டரில் நடிக்க இணைந்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு என கட்டப்பட்டு வரும் கட்டிடத்திற்கு நிதி தருவதற்காக விஷால் மற்றும் கார்த்தி இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளனர் என்று ஏற்கனவே கொடுத்திருந்த வாக்கின்படி இருவரும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணியின் வெற்றிக்கு உதவிய ஆர்யாவும் தற்போது இணைந்துள்ளதால் அவரும் நடிகர் சங்கத்தின் கட்டிடத்திற்காக தனது பங்களிப்பை அளித்துள்ளார் என்றே கூறப்படுகிறது.

இருப்பினும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்களின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை காத்திருப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.