close
Choose your channels

நீண்ட இடைவெளிக்கு பின் வெளியான கலைஞரின் புகைப்படம். திமுக தொண்டர்கள் உற்சாகம்

Wednesday, May 24, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 1957ஆம் ஆண்டு குளித்தலை தொகுதியில் முதன்முதலாக எம்.எல்.ஏஆக தேர்வு பெற்றார். அதுமுதல் கடந்த ஆண்டு நடந்த தேர்தல் வரை கருணாநிதி ஒரு தேர்தலிலும் தோல்வி அடையாமல் தொடர்ந்து எம்.எல்.ஏவாக வெற்றி பெற்று வருகிறார். இந்த நிலையில் கருணாநிதி எம்.எல்.ஏ பதவியேற்று 60 ஆண்டுகள் நிறைவு பெறுவதை அடுத்து அவரது பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி வைரவிழா நடத்த திமுக திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வைரவிழாவில் மருத்துவர் அனுமதித்தால் மட்டுமே கருணாநிதி கலந்து கொள்வார் என்று திமுகவின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்தார். ஆனாலும் இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி உள்பட பல தேசிய தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் கருணாநிதியின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. கருணாநிதியுடன் மு.க. ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்து திமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்ததாக கூறப்படுகிறது. இணையதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.