close
Choose your channels

தெலுங்கில் ரீமேக் ஆகும் அதர்வா முரளியின் படம்

Monday, May 22, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அதர்வா முரளி, கேதரின் தெரஸா, தருண் அரோர உள்பட பலர் நடிப்பில் சந்தோஷ் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த திரைப்படம் 'கணிதன்'. இந்த படம் கடந்த ஆண்டு தமிழில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில் இந்த படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த படத்தில் அதர்வா நடித்த கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் நிகில் சித்தார்த் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஏற்கனவே தெலுங்கில் 'டிஸ்கோ', சூர்யா vs சூர்யா, உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் நாயகியாக தமிழில் நடித்த கேதரின் தெரசா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் உள்பட இந்த படத்தின் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் இன்னும் ஓரிரு நாட்களில் அதிகாரர்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு வெகுவிரைவில் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.