close
Choose your channels

அட்லியின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

Sunday, April 9, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' என்ற வெற்றிப் படத்தை இயக்கியவரும், தற்போது 'தளபதி 61' படத்தை இயக்கி வருபவருமான இயக்குனர் அட்லி தயாரித்து வரும் 'சங்கிலி புங்கிலி கதவை தொற' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் மே மாதம் 19ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை உறுதி செய்யும் வகையில் ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டர் ஒன்று அட்லியின் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அட்லி தயாரிக்கும் முதல் திரைப்படமான இந்த படத்தில் ஜீவா, ஸ்ரீதிவ்யா முதன்முதலாக ஜோடி சேருகின்றனர். மேலும் சூரி, ராதிகா, ராதாரவி, தம்பி ராமையா, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தில் ஜெய் மற்றும் அக்சரா கெளடா சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை lke என்பவர் இயக்குகிறார். இவர் நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

விஷால் சந்திரசேகர் இசையில், சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், சுரேஷ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் ஜிவாவுக்கு திருப்புமுனையை கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.