close
Choose your channels

பாகுபலி 2: 50வது நாளை கடந்தும் அசர வைக்கும் வசூல்

Monday, June 19, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எஸ்.எஸ். ராஜமெளலியின் பிரமாண்டமான இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா ,சத்யராஜ் நடிப்பில் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி வெளியான 'பாகுபலி 2' திரைப்படம் சமீபத்தில் 50வது நாள் என்ற மைல்கல்லை கடந்தது. 50 நாட்களை கடந்தும் சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இந்த படத்தின் வசூல் அசர வைக்கும் அளவுக்கு இருப்பதாக விநியோகிஸ்தர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

குறிப்பாக சென்னையில் இந்த படம் கடந்த வாரம் 8 திரையரங்குகளில் 54 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.10,88,520 வசூல் செய்துள்ளது. மேலும் திரையரங்குகளில் 80% பார்வையாளர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இந்த படம் கடந்த ஏப்ரல் 28 முதல் ஜூன் 18 வரை ரூ.16,43,28,840 தமிழில் மட்டும் வசூல் செய்துள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் சேர்த்து சென்னையில் இந்த படம் ரூ.18,60,36,120 வசூல் செய்து எந்த படமும் நெருங்க முடியாத நிலையில் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.