close
Choose your channels

'பாகுபலி 2' சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்

Tuesday, April 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது. முதல் பாகத்தை பார்த்தவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

பாகுபலி 2' படத்திற்கு சென்சார் அதிகாரிகள் U/A சான்றிதழ் வழங்கியுள்ளனர். மேலும் 'பாகுபலி 2' திரைப்படம் 170 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 50 நிமிடங்கள் ஓடுகின்றது. கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஓடும் பெரிய படமாக இருந்தாலும் பார்வையாளர்கள் சலிப்படைய வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் 'பாகுபலி' திரைப்படம் கிட்டத்தட்ட இதே ரன்னிங் டைம் அதாவது 159 நிமிடங்கள் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.

'பாகுபலி'யை கட்டப்பா ஏன் கொலை செய்தார் என்ற மர்மம் இந்த 170 நிமிடங்களில் எத்தனையாவது நிமிடத்தில் தெரிய வரும் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.