close
Choose your channels

'கபாலி'யை முறியடித்த 'பாகுபலி 2', எந்திரனையும் நெருங்குகிறது

Monday, May 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய சினிமாவின் கெளரவம் என்று புகழப்படும் 'பாகுபலி 2' திரைப்படத்தின் பத்து நாள் சென்னை வசூல் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' படத்தின் பத்து நாள் வசூலை முறியடித்தது என்பதை சிறிது நேரத்திற்கு முன்னர் பார்த்தோம்.

இந்த நிலையில் தமிழகத்தில் இதுவரை அதிக வசூல் செய்த திரைப்படமான சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'எந்திரன்' படத்தின் வசூலை 'பாகுபலி 2' திரைப்படம் நெருங்கிவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த படம் கடந்த பத்து நாட்களில் ரூ.81 கோடி வசூல் செய்துள்ளது. சென்னையில் ரூ.9.6 கோடி, செங்கல்பட்டில் ரூ.20 கோடி மற்றும் கோவையில் ரூ.12.5 கோடி இந்த படம் வசூல் செய்துள்ளது. தமிழகத்தில் இதுவரை அதிக வசூல் செய்த படங்களில் எந்திரனுக்கு அடுத்த இடத்தில் 'பாகுபலி 2' தற்போது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் 'எந்திரன்; திரைப்படம் தமிழகத்தில் முதல் வாரம் ரூ.80 கோடியும், இரண்டாவது வாரம் ரூ.70 கோடியும் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.