close
Choose your channels

'பாகுபலி 2' டிரைலர் ரன்னிங் டைம்

Wednesday, March 15, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியாவின் பிரமாண்டமான திரைப்படமான 'பாகுபலி 2' திரைப்படத்தினை உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் இந்த படம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் மார்ச் 16ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த டிரைலர் தற்போது சென்சார் செய்யப்பட்டுள்ளது.

'UA' சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ள 'பாகுபலி 2' படத்தின் டிரைலரின் ரன்னிங் டைம் 140 வினாடிகள் ஆகும். அதாவது இரண்டு நிமிடங்கள் இருபது வினாடிகள் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை வெளியாக உள்ள இந்த டிரைலர் நிச்சயம் மாபெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபாஸ், அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, ராணா, சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தை எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கியுள்ளார். 'பாகுபலி'யை கட்டப்பா ஏன் கொலை செய்தார் என்ற மர்மம் நாளை வெளிவரும் டீசரில் தெரிய வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.