close
Choose your channels

ஷாருக்கான், அமீர்க்கான் பட சாதனையை முறியடித்தது பாகுபலி

Thursday, July 16, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படம் என்ற பெருமையை பெற்ற 'பாகுபலி' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் நிலையில், இந்த படம் இந்தியாவின் மிகப்பெரிய வசூல் படம் என்ற பெருமையை அடையும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்பது போல், இந்த படத்தின் வசூல் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.


இரண்டே நாட்களில் ரூ.100 கோடி, ஐந்தே நாட்களில் ரூ.200 கோடி என நான்ஸ்டாப் வசூல் மழையில் நனைந்து கொண்டிருக்கும் பாகுபலி, மிக வேகமாக ரூ.200 கோடி வசூல் செய்த இந்திய திரைப்படம் என்ற சாதனையையும் பெற்றுள்ளது. ரிலீஸான முதல் வாரத்தில் அதிக வசூலை பெற்ற படங்களாக இதுவரை விளங்கிய ஹேப்பி நியூ இயர் மற்றும் பிகே படங்களின் வசூல் சாதனையை 'பாகுபலி' முறியடித்து விட்டது என்றே பாக்ஸ் ஆபீஸ் வசூல் விபரங்கள் கூறுகின்றன.

இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பாகுபலி திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தை சீன மற்றும் ஜப்பான் மொழியிலும் மிக விரைவில் வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதால், இந்த படத்தின் கலெக்ஷன் அசால்ட்டாக ரூ.500 கோடியை எட்டிவிடும் என்று கூறப்படுகிறது. இங்கிலீஷ் விங்கிலீஷ், பிகே ஆகிய படங்களை அடுத்து சீனாவில் வெளியாகும் மூன்றாவது இந்திய படம் 'பாகுபலி' என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.