close
Choose your channels

7 வருட 'எந்திரன்' சாதனையை முறியடித்த 'பாகுபலி 2'

Tuesday, May 16, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி ஒவ்வொரு சாதனையாக தகர்த்து வருவதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இதுவரை தமிழகத்தில் மிக அதிகமாக வசூல் செய்த படம் என கடந்த 7 வருடங்களாக சாதனையில் இருந்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'எந்திரன்' திரைப்படம். இந்த திரைப்படத்தின் தமிழக வசூல் ரூ.106 கோடி ஆகும்

இந்த நிலையில் இந்த வசூல் தொகையை 18 நாட்களில் 'பாகுபலி 2' திரைப்படம் தாண்டிவிட்டது. 'பாகுபலி 2' படத்தின் தற்போதைய தமிழக வசூல் ரூ.106.7 கோடி ஆகும். எனவே இப்போதைக்கு தமிழகத்தில் அதிக வசூல் பெற்ற படம் 'பாகுபலி 2' திரைப்படம் தான் என்ற பெருமையை பெற்றுள்ளது.

இதேபோல் 'பாகுபலி 2' திரைப்படம் ஆந்திரபிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, மற்றும் பாலிவுட்டில் அதிக வசூல் பெற்ற படம் என்ற சாதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் கேரளாவில் மட்டும் இன்னும் மோகன்லாலின் 'புலிமுருகன்' பட வசூலை முறியடிக்கவில்லை. அதுவும் இன்னும் ஒருசில நாட்களில் நடக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.