close
Choose your channels

'பாகுபலி 2' படத்தை ரிலீஸ் செய்யும் இளையதளபதி பட தயாரிப்பாளர்.

Monday, March 13, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புள்ள படங்களில் ஒன்று பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர். பாகுபலியை கட்டப்பா கொலை செய்தது ஏன் என்ற காரணத்தை தெரிந்து கொள்ள இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதுதிலும் உள்ள ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த படம் வரும் ஏப்ரல் இறுதியில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் வியாபாரம் ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன் வெளிவந்த தகவலின்படி இந்த படத்தை தமிழகத்தின் இரண்டு பெரிய ஏரியாக்களில் ரிலீஸ் செய்யும் உரிமை பெற்ற நிறுவனங்களின் தகவல் குறித்து தெரிய வந்துள்ளது.

இந்த படத்தின் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாவின் ரிலீஸ் உரிமையை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகை கொடுத்து பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த நிறுவனம் தற்போது விஜய் நடித்து வரும் 'விஜய் 61' படத்தை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல வட ஆற்காடு மற்றும் தென்னாற்காடு பகுதி ரிலீஸ் உரிமையை ஃபைவ்ஸ்டார் செந்தில் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் ரிலீஸ் செய்யும் உரிமை பெற்றவர்களின் விபரங்க்ள் வெகுவிரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.