close
Choose your channels

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் 'பாட்ஷா' நாயகி திடீர் சந்திப்பு

Monday, May 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை கடந்த சில மாதங்களாகவே பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை நிமித்தம் சந்தித்து வருகின்றனர். விரைவில் தேர்தல் வரலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ரஜினியை அரசியலுக்கு இழுக்க பாஜக உள்பட பல கட்சிகள் முயற்சி செய்து வருகின்றன.

இந்த நிலையில் ரஜினியின் சூப்பர் ஹிட் படமான 'பாட்ஷா' நாயகியும், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் செயலாளருமான நக்மா நேற்று ரஜினிகாந்த் அவர்களை சந்தித்தார். ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்தில் சுமார் 20 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில் தான் அவரிடம் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்று நக்மா தெரிவித்தார்

நானும் ரஜினியும் நீண்ட நாள் நண்பர்கள் என்றும், அவருடன் திரைப்படங்களிலும் பணிபுரிந்ததாகவும் கூறிய நக்மா, 'ரஜினி அரசியலுக்கு வருவது அவரது விருப்பம், ஆனால் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்பது மக்கள் விரும்புகின்றனர்' என்று கூறினர்.

கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வரும் நக்மா, திடீரென ரஜினியை சந்தித்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.