close
Choose your channels

ஆகஸ்ட் 7ல் ரிலீஸாகிறது பாலா படம்

Monday, July 13, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா, சமீபத்தில் மிஷ்கின் இயக்கிய 'பிசாசு' படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறினார் என்பது தெரிந்ததே. பிசாசு படம் பெற்ற வெற்றியை அடுத்து அவர் தயாரித்து வந்த அடுத்த படம் 'சண்டிவீரன்'.

அதர்வா, ஆனந்தி உள்பட பலர் நடித்த இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


ஜூலையில் பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் அதிகம் வெளியாகவுள்ளதால், படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்டு மாதம் 7 என தயாரிப்பு தரப்பில் இருந்து முடிவு செய்யப்பட்டுள்ளது.

களவாணி, வாகை சூட வா, நய்யாண்டி, போன்ற படங்களை இயக்கிய ஏ. சற்குணம் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அருணகிரி இசையமைத்துள்ளார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்ள்ள இந்த படத்தை ஸ்ரீ க்ரீன் புரடொக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இராஜபாளையம், மன்னார்குடி, பட்டுக்கொட்டை போன்ற இடங்களில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.