close
Choose your channels

கமல்ஹாசன் ஒரு உண்மையான தீவிரவாதி. சொன்னவர் யார் தெரியுமா?

Tuesday, April 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து இயக்கிய 'விஸ்வரூபம்' படத்தில் தீவிரவாதிகள் குறித்த விரிவான அலசல் இருந்தது என்பது அனைவரும் ஒப்புக்கொண்ட உண்மை. எந்த ஒரு கேரக்டரை கொடுத்தாலும் அந்த கேரக்டராக மாறிவிடும் தன்மையுடைய கமல், இந்த படத்தில் ஒரு உண்மையான தீவிரவாதியாகவே மாறி அவர்கள் தரப்பு நியாயத்தையும் எடுத்துரைத்தார். இதனால் இந்த படத்திற்கு பல சிக்கல்கள் எழுந்து, அதனை வெற்றிகரமாக கமல் முறியடித்தாலும் தனக்கு ரூ.60 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்

இந்த நிலையில் ஹாலிவுட் தயாரிப்பாளர் பேரி ஆஸ்பான், கமல்ஹசனின் 'விஸ்வரூபம்' படத்தை பார்த்துவிட்டு கமலஹாசன் தான் உண்மையான தீவிரவாதி என புகழ்ந்துள்ளார். அவர் இந்த படம் குறித்து கமலிடம் கூறியபோது, ' நீ தான் தீவிரவாதி, அப்படியே பல காட்சிகளை ரியலாக கண் முன் கொண்டு வந்துவிட்டீர்கள்` என தெரிவித்துள்ளார்.இதை கமலஹாசனே பல பேட்டியில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் பேரி ஆஸ்பான் தயாரிப்பில் கமல் ஒரு படத்தில் நடித்து இயக்குவதாக செய்தி வெளிவந்தது. இந்நிலையில் கமல்ஹாசனின் 'சபாஷ் நாயுடு' முடிந்த பின்னர் இந்த படம் தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.