close
Choose your channels

பாரதிராஜாவுக்கு என்னை பிடிக்காது. ரஜினிகாந்த்

Saturday, April 15, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் 'பாரதிராஜா இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சினிமா' என்ற சினிமா பயிற்சிப் பட்டறை நிறுவனத்தை நேற்று தொடங்கினார். இந்த தொடக்க விழாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசியபோது, ''பாரதிராஜாவுக்கு தனிப்பட்ட முறையில் என்னைப் பிடிக்கும். ஆனால் நடிகராக என்னைப் பிடிக்காது. நான் எவ்வளவுதான் நடித்தாலும் என்னை சிறந்த நடிகன் என்று ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று கூறினார். மேலும் திரைத்துறை என்பது பாரதிராஜாவின் உயிரோடு பின்னி பிணைந்த ஒன்று. மக்களுக்கு பிடித்துவிட்டால் ஒரு கலைஞன் செய்யும் அனைத்தையும் ரசிப்பார்கள். பாரதிராஜாவின் பயிற்சி நிறுவனத்தில் மாணவர்கள் சிறப்பாக பயிற்சியை பெறுவார்கள்' என்று கூறினார்.

பாரதிராஜாவின் இயக்கத்தில் ரஜினிகாந்த், '16 வயதினிலே' மற்றும் 'கொடி பறக்குது' ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.