close
Choose your channels

ஓவியாவின் கெளரவத்தை காப்பாற்றிய கமலுக்கு நன்றி தெரிவித்த நடிகை

Monday, August 7, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நேயர்கள் மட்டுமின்றி திரையுலகினர்கள் தொடர்ந்து பார்த்து வருகின்றனர். குறிப்பாக பழம்பெரும் நடிகை ஸ்ரீப்ரியா, பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து தனது கருத்துக்களை அடிக்கடி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்.
இந்த நிலையில் ஓவியாவை தான் காதலிக்கவில்லை என்றும், தான் நட்பாக பழகியதை ஓவியா தவறாக எடுத்து கொண்டதாகவும் கமல் உள்பட அனைவரிடமும் ஆரவ் கூறி வந்த நிலையில் அவர் வாயாலேயே ஓவியாவுக்கு முத்தம் கொடுத்ததையும், ஓவியாவின் மனநிலை மாற்றத்திற்கு தானும் காரணம் என்பதையும் நேற்றைய நிகழ்ச்சியில் ஆரவ்வை ஒப்புக்கொள்ள வைத்தார் கமல்.
இதுகுறித்து கருத்து கூறிய ஸ்ரீப்ரியா, 'தவறாக புரிந்து கொண்டாள் என்று கூறிய வாயால் அவள் கொடுத்ததை திருப்பி கொடுத்தேன் என்று ஒப்புக்கொள்ள வைத்து அப்பெண்ணுக்கு கெளரவத்தை பெற்று தந்தது பெருங்குணம், பெண்ணாக என் நன்றி' என்று ஸ்ரீப்ரியா தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.