close
Choose your channels

'திருட்டுப்பயலே 2' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Wednesday, June 21, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜீவன், மாளவிகா, சோனியா அகர்வால், அப்பாஸ் நடிப்பில் சுசிகணேசன் இயக்கத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான 'திருட்டுப்பயலே' திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றதை அடுத்து 11 ஆண்டுகள் கழித்து தற்போது இந்த படத்தின் 2ஆம் பாகம் தயாராகி வருகிறது.
'திருட்டுப்பயலே 2' படத்தில் பாபிசிம்ஹா, பிரசன்னா, அமலாபால், விவேக் உள்பட பலர் நடித்து வருகின்றனர். முதல் பாகத்தை இயக்கிய சுசிகணேசன் இந்த படத்தையும் இயக்க, இந்த படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் அதாவது ஜூன் 23ஆம் தேதி இந்த படத்தின் டீசர் வெளியாகும் என்று ஏஜிஎஸ் நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாதி தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.