close
Choose your channels

தோனி என் உடன்பிறவா சகோதரர்: பிராவோ நெகிழ்ச்சி

Tuesday, June 27, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் பிராவோ, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியபோது தோனியின் நெருக்கமான நட்பை பெற்றார். இந்த நிலையில் மேற்கிந்திய சுற்றுப்பயணம் செய்துள்ள தோனி உள்பட இந்திய அணி வீரர்களை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பிராவோ விருந்தளித்தார்.

மேற்கிந்திய தீவுகள் அணியில் தற்போது பிராவோ விளையாடவில்லை என்றாலும் இரண்டாவது ஒருநாள் போட்டியை நேரில் காண போர்ட் ஆஃப் ஸ்பெயினுக்கு நேரடியாக பிராவோ வந்திருந்தார். போட்டி முடிந்த பின்னர் தோனி மற்றும் இந்திய வீரர்கள் தனது வீட்டிற்கு விருந்துண்ண வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.


பிராவோ வேண்டுகோளை நட்புடன் ஏற்றுக்கொண்ட தோனி, விராட் கோலி, ஷிகர் தவான், புவனேஷ்வர் குமார், ரஹானே ஆகியோர் பிராவோ சென்றுள்ளனர். தோனி தனது மகள் ஸிவா தோனியுடன் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பு குறித்து பிராவோ தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'இன்னொரு அம்மாவிடமிருந்து கிடைத்த என் சகோதரர் தோனி, தனது அழகான மகளுடன் என் வீட்டிற்கு வந்தார்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் பிரோவோ வீட்டில் எடுத்த படங்களை அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.