1. தமிழ்
  2. తెలుగు
  3. മലയാളം
  4. Hindi
  5. Tamil
  6. Telugu
  7. Malayalam
  8. Kannada

சிலை விவகாரம் பிரபு அறிக்கை

IndiaGlitz [Friday, January 24, 2014]
Comments

நடிகர் திலகம் சிவாஜி சிலையை அகற்ற வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் இன்று காலை தீர்ப்பு வந்திருக்கிறது. சிலையை வெகு விரைவில் அந்த இடத்திலிருந்து அகற்ற வேண்டும் என்றும், அந்த சிலையை வேறு எங்கு வைக்க வேண்டும் என்கிற முடிவை அரசிடம் விட்டுவிடுவதாகவும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து சிலையை அங்கிருந்து வெகு விரைவில் அகற்றிவிடுவார்கள். தமிழகத்திலிருக்கும் பெரும்பாலான சிவாஜி ரசிகர்கள் இந்த தீர்ப்பினால் மனம் வருந்தியிருக்கிற நேரத்தில் நடிகர் திலகத்தின் புதல்வர்களான ராம்குமாரும், பிரபுவும் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.

 

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது- சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் இருக்கும் நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் சிலையை அகற்றுவது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் இறுதி முடிவெடுக்கும் பொறுப்பை அரசின் முடிவுக்கே விட்டிருக்கிறது. நீதிமன்ற தீர்ப்பிற்கு மதிப்பளிக்கும் வகையில் லட்சக்கணக்கான சிவாஜி ரசிகர்களும், நண்பர்களும், அப்பா மேல் மதிப்பும் மரியாதையும் வைத்திருப்போரும் இது சம்பந்தமாக எந்தவித பேபாராட்டமோ ஆர்ப்பாட்டமோ தற்போது செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். இது தொடர்பாக அரசு நல்ல முடிவு எடுக்கும் என்று நம்புகிறோம். அதுவரை அமைதி காக்கும்படியும் எங்கள் சார்பாகவும் நடிகர் திலகம் குடும்பத்தினர் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறோம். 
Shah Rukh Khan is doing fine

Copyright 2017 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 Shah Rukh Khan is doing fine
 Door crashes on SRK during 'Happy New Year' shooting
 Anirudh Settles Down
 Aishwarya Rai Back to Debut
 Vadacurry shoot completed
 Vikram to work with Dharani and Saravanan?
 Whats Cooking in SimbuNayan Shooting Spot?
 Vaayai Moodi Pesavum Movie First look Poster
 Game ON for STR & Dhanush
 Malini 22 Palayamkottai & Rummy in USA Press Release
 Alia not a part of Dhanushs project
 SSR admitted in Hospital
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2017 IndiaGlitz.com. All rights reserved.