1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

திரைக்கப்பாலும் வீசிய ஒளி

IndiaGlitz [Thursday, February 13, 2014]
Comments
ஃபிப்ரவரி 13, 2014 தமிழ் சினிமாவுக்கும் அதன் ரசிகர்களுக்கும் மிகச் சோகமான நாள். தமிழ் சினிமாவின் தலை சிறந்த இயக்குநர்களில் ஒருவராக அறியப்படும் பாலு மகேந்திரா இன்று காலை ஒரு தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 74.
 
பாலு மகேந்திரா ஒரு தலை சிறந்த இயக்குநர் மட்டுமல்ல. ஒரு தேர்ந்த ஒளிப்பதிவாளர், சிறந்த படத்தொகுப்பாளர், சினிமா ரசனை மிக்கவர். தரமான சினிமாவுக்காக பாடுபட்டவர், தான் கடைசியாக இயக்கிய தலைமுறைகள் என்ற படத்தில் நடிகராகவும் அறிமுகமானார். ஆனால் அதுவே அவரது கடைசிப் படமாகவும் அமைந்துவிட்டது. 
 
1939இல் இலங்கையில் உள்ள படிகோலாவில் பிறந்த பாலநாதன் பெஞ்சமின் மகேந்திரன் புகைப்படக் கலையின் பால் சிறுவயதிலேயே ஈர்க்கப்பட்டார். தன் 13ஆம் வயதில் டேவிட் லீனின் திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பைக் காண நேர்ந்தபோது திரைப்பட இயக்கத்திலும் ஆர்வம் கொண்டார். லண்டனில் பட்டப்படிப்பை முடித்து புனேவில் உள்ள திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக்கான பட்டப்படிப்பை படித்து தங்கப் பதக்கம் பெற்றார். 

1974இல் நெல்லு என்ற மலையாளப் படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். அதன் பின் தென்னகத்தின் நான்கு மொழிகளிலும் பல்வேறு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். அவற்றுள் மகேந்திரனின் முள்ளும் மலரும் மணி ரத்னத்தின் பல்லவி அனு பல்லவி ஆகியவையும் அடங்கும். 
 
தன் கடைசிப் படம் வரை ஒளிப்பதிவுக்காக செயற்கை வெளிச்சங்களை பாலு மகேந்திரா பயன்படுத்தியதில்லை. இயற்கை வெளிச்சத்தைக் கொண்டே அழகான திரைக் காவியங்களை கண்களுக்கு விருந்தாக அளித்த அவரது ஒளிப்பதிவுக்கு ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் திரையுலகிலும் பெரும் மதிப்பு இருந்தது. அவரது ஒளிப்பதிவில் ஒரு படம் இயக்க வேண்டும் என்பது இயக்குநர்களின் கனவாக இருந்தது.  

Balu Mahendra passed away


இன்றும் இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்கள் பாலு மகேந்திராவைத் தங்கள் மானசீக குருவாகக் கருதுகிறார்கள். 
 
1977இல் கோகிலா என்ற கன்னட படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் பாலுமகேந்திரா. கமலஹாசனும் ஷோபாவும் நடித்த அந்தப் படத்தின் தமிழ் டப்பிங் வடிவமே தமிழகத்தில் 100 நாட்கள் ஓடியது. தன் காலகட்ட இயக்குநர்களுக்கு நேர் எதிராக தமிழ் சினிமாவின் வியாபார நெருக்கடிகளுக்கு அடிபணிந்திடாதவராக பாலுமகேந்திரா அடையாளம் காணப்பட்டார்.
 
அதற்குப் பின் அவர் கமலஹாசனுடன் இணைந்து பணியாற்றிய மூன்றாம் பிறை கமலஹாசனுக்கு முதல் தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. பின்னர் அவர் இயக்கிய் வீடு, சந்தியாராகம் ஆகிய படங்களும் தேசிய விருதுகளைப் பெற்றன. மேலும் பல தேசிய விருதிகளையும் ஃப்லிம்ஃபே விருதுகளையும் பாலுமகேந்திராவின் படங்கள் குவித்திருக்கின்றன. 
 
வீடு, சந்தியாராகம், மறுபடியும் ஆகிய மாற்று சினிமா முயற்சிகளைச் செய்துபார்த்ததோடு, நீங்கள் கேட்டவை, ரெட்டைவால் குருவி, சதிலீலாவதி ஆகிய வணிக கேளிக்கை படங்களிலும் தன்னால் சாதிக்க முடியும் என்று நிரூபித்தார் பாலுமகேந்திரா. இந்தப் படங்களிலும் பாலுமகேந்திராவுன் தனி முத்திரை இருக்கும். வசூலையும் குவித்த படங்கள் இவை.
 
தான் இயக்கிய படங்களுக்கான ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு ஆகிய முக்கியமான பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் தானே பார்த்துக்கொள்வார். இதற்கான காரணத்தை அண்மையில் வழங்கிய ஒரு பேட்டியில்தான் தெளிவுபடுத்தினார். ஒரு திரைப்படத்தின் இயக்கம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை ஆகிய நான்கு முக்கியமான பங்களிப்புகளும் ஒரே நபரிடமிருந்து வந்தால்தான் நல்ல சினிமா எடுக்க முயற்சிக்க முடியும் என்றார். இசை மட்டும் ஏன் இளையராஜாவிடம் கொடுக்கிறீர்கள் என்று கேட்பதற்கு முன், "இளையராஜா என் சிந்தனை ஓட்டத்தை அறிந்தவர் அவர் இசையமைப்பது நானே இசையமைப்பதைப் போன்றது" என்று தெளிவுபடுத்தினார்.

அந்த அளவுக்கு இளையராஜாவுக்கும் இவருக்குமான நட்பு இருந்தது. பாலு மகேந்திராவின் முதல் இரண்டு படங்களைத் தவிர மற்ற அனைத்து படங்களுக்கும் ராஜாதான் இசையமைத்தார். அண்மையில் ராஜாவுக்கு மாரடைப்பு வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது தள்ளாத வயதிலும் அவரைப் போய் பார்த்துவிட்டு வந்தார் பாலு மகேந்திரா. 

தமிழ் சினிமா வரலாற்றில் திரையில் மட்டுமல்லாமல் திரைக்கு அப்பால் பங்களித்த கலைஞர்கள் மிகச் சிலரே. பாலுமகேந்திரா அவர்களில் முக்கியமானவர். ஈழ பிரச்சினை பற்றி படம் எடுத்ததில்லை என்றாலும் ஈழ மக்கள் மீதான அக்கறையை எப்போதும் வெளிப்படுத்திவந்திருக்கிறார். தமிழ் சினிமா வெள்ளைத் தோல் மோகத்தில் ஆழ்ந்திருந்தபோது கறுப்புதான் தமிழர்களின் நிறம் என்பதை வலியுறுத்திவந்ததோடு கறுப்பு நிறம் கொண்ட நாயகிகளையே தன் பெரும்பாலான படங்களில் நடிக்க வைத்தார். அவர்களை மிக அழகாகவும் தோற்றமளிக்கச் செய்தார். . 
 
பாலா, ராம், சீனு ராம்சாமி என இன்று தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தியுள்ள பல்வேறு இளம் படைப்பாளிகள் இவரிடம் சினிமா பயின்று வந்த்வர்கள். பாலுமகேந்திரா சினிமா பட்டறை என்ற அமைப்பைத் தொடங்கி தரமான நடிகர் நடிகைகளையும் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.  மோசமான உடல்நிலையைப் பொருட்படுத்தாமல் சினிமாவின் நலனில் அக்கறை கொண்டோர் நிகழ்த்தும அனைத்து நிகழ்வுகளில் பங்கேற்று ஊக்கப்படுத்தும் வழக்கத்தை கடைசிவரை நிறுத்தவில்லை. 
 
தமிழ் திரைப்படஙகளை ஆவணப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் தொடர்ந்து பேசிவந்தார். வீடு, சந்தியாராகம் ஆகிய படங்களின் பிரதிகளை உரிய முறையில் பாதுகாத்து வைக்க முடியாமல் போனதால் அவை அழியும் நிலையில் இருப்பதாகத் பல நிகழ்வுகளில் ஆதங்கப்பட்டிருக்கிறார். ஆனால் அவரது இந்தக் குரலுக்கு இறுதிவரை அரசு செவிசாய்க்கவில்லை. தமிழ் திரையுலகம் சார்பாகவும் படங்களை ஆவணப்படுத்துவதற்கான காத்திரமான முயற்சிகள் எடுக்கப்படவில்லை.    
 
தான் கடைசியாக இயக்கிய தலைமுறைகள் என்ற படத்தில் தமிழ் வழிக் கல்வி மற்றும் கலாச்சார வேர்களுடனான தொடர்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தினார். ஆங்கில மோகத்தில் தாய் மொழி பேசுவதை இழிவாகக் கருதும் மனப்பான்மை தமிழர்களிடம் அதிகரித்துவரும் சூழலில் "தமிழை மறந்துவிடாதீர்கள்" என்று வேண்டிக்கொள்வதற்காகவே அவர் அந்தப் படத்தை இயக்கியதாகத் தோன்றியது.
தன் கடைசி படத்தின் திரையிடலில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது "நான் சீக்கிரம் செத்துவிட மாட்டேன். இன்னும் இதுபோல் படமாக்க என்னிடம் ஐந்து கதைகள் இருக்கின்றன" என்று நம்பிக்கையுடன் பேசினார். ஆனால் இந்த விஷயத்தில் காலம் அவரது கனவைப் பொய்யாக்கிவிட்டது. 
 
ஆனால் அவரது சிஷ்யர்களும் அவரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டவர்களும் நினைத்தால் தமிழ் சினிமாவின் தரத்தை உலகத் தரத்துக்கு உயர்த்துவதற்கான அவரது மற்ற கனவுகளை நனவாக்க முடியும். 
 


Other News


What inspired Simbu towards Thala

Kochadiiyaan Audio Postponed

Yuvan de activates

Celebrities condole Balu Mahendras death

What inspired Simbu towards Thala





Copyright 2016 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.



Other News

 What inspired Simbu towards Thala
 Kochadiiyaan Audio Postponed
 Yuvan de activates
 Celebrities condole Balu Mahendras death
 Balu Mahendras cremation details
 Who misses Vijaykanth in films?
 GVP loses in 3 months
 Balu Mahendra passes away
 Ajiths plan after Gautham film
 What is Nazriyas Vday plan?
 Ramya Quits
 Two more follow Yuvans footsteps
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2016 IndiaGlitz.com. All rights reserved.