1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

எதிர்பார்ப்பின் உச்சத்தில் விஜ&#

IndiaGlitz [Friday, February 14, 2014]
Comments

துப்பாக்கி என்ற  பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து விஜயும் ஏ.ஆர்.முருகதாஸும் இணைந்திருக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது அனைவரும் அறிந்ததே. இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் முடிந்துவிட்டது. இப்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நடந்துகொண்டிருக்கிறது. கொல்கத்தாவில் எடுக்கப்பட்டது சண்டைக் காட்சி என்றால் சென்னையில் படமாக்கப்பட்டுக்கொண்டிருப்பது பாடல் காட்சி.

Vijay - AR Murugadoss

இப்போது படமாகிக்கொண்டிருக்கும் பாடலை கேட்ட விஜய் படத்தின் இசையமைப்பாளர் அனிருத்திடம் சில திருத்தங்கள் செய்யச் சொன்னாராம்.இளங்கன்றான அனிருத் உடனடியாக அந்த திருத்தங்களைச் செய்து பாடலைப் பதிவு செய்து விஜயைக் கேட்கச் சொன்னாராம்.

திருத்தப்பட்ட பாடலை தான் காருக்குள் அமர்ந்துகொண்டு விஜய் கேட்டுக்கொண்டிருந்தாராம். அனைத்து கதவுகளையும் ஜன்னல்களையும் மூடிக்கொண்டுதான் பாடலைக் கேட்டிருக்கிறார் இளையதளபதி. இருப்பினும் பாடலின் சில ஒலித் துணுக்குகள் வெளியே கேட்டிருக்கின்றன. விஜயின் காரிலிருந்து சத்தம் வருவதைக்கேட்டு காரைச் சூழ்ந்துகொண்ட ரசிகர்கள் அந்த ஒலித் துணுக்குகளைக்கூட விட்டுவிடாமல் தங்கள் மொபைல்ஃபோன்களில் ரெக்கார்ட் செய்திருக்கிறார்கள்.


விஜய் படம் என்றாலே எதிர்பார்ப்பு விண்ணை முட்டும். இந்தப் படத்தில் தனக்கு மிகப்பெரிய வெற்றிப் படம் கொடுத்த முருகதாஸுடன் இரண்டாம் முறை இணைகிறார். 'கொலவெறி' புகழ் அனிருத்துடன் முதல் முறை. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு கேட்கவா வேண்டும்?
Vijays former heroine enters politics

Copyright 2017 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 Vijay's former heroine enters politics
 'Nimirndhu Nil' gets a clean chit
 A Legacy comes to an end!
 The Mounika episode ends peacefully
 Famous celebrity couple headed for a split?
 Kollywood halts work in homage to BM
 Vijay ARM Project progressing in Chennai
 Shriyas big day in Kollywood
 Mounikas entry prohibited
 Nadhiya pair up with Kamal for the first time?
 Vijay to act again in Thuappakki
 Bhavanas relationship status
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2017 IndiaGlitz.com. All rights reserved.