1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

கதை இதுவல்ல ஏஆர்முருகதாஸ் தரும&#

IndiaGlitz [Tuesday, February 25, 2014]
Comments

துப்பாக்கி வெற்றிக்குப் பிறகு விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படம் வேகமாக வளர்ந்துகொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் தொட்டா ராய் என்பவர் முக்கிய வில்லன் வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகின. இன்னும் தலைப்பே முடிவு செய்யப்படாத படத்தின் கதை இதுதான் என்று தகவல்கள் வந்தன.

A.R.Murugadoss

 

கொல்கத்தாவிலும் சென்னையிலும் படப்பிடிப்பை முடித்துவிட்டு இப்போது ராஜமுந்திரியில் படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருக்கும் முருகதாஸ் தன் படத்தை சுற்றிப் பின்னப்படும் வதந்திவலைகளை அறுத்தெறிந்தார்.

 

அவரது வார்த்தைகளின்படி படத்தின் பிரதான வில்லன் தொட்டா ராய் இல்லை. கொல்கத்தாவில் சண்டைக் காட்சி எடுத்தபோது ஒரு வங்காள முகம் தேவைப்பட்டதாலேயே அவர் அந்தக் காட்சிக்குப் பயன்படுத்தப்பட்டார். படத்தில் பிரதான வில்லனாக நடிக்கப் போகிறவர் யார் என்று இன்னும் முடிவு செய்யவில்லை. அந்த வலுவான பாத்திரத்தை சுமக்க தகுதியான நடிகர் யார் என்று தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

 

படத்தின் கதை குறித்து உளவும் செய்திகள் தொட்டா ராய் பரப்பிவிட்டதுதான். ஆனால் முருகதாஸுக்கு அவை பற்றி துளியும் கவலையில்லை. காரணம் "தொட்டா ராய் சொன்ன கதைக்கும் நான் இயக்கிக்கொண்டிருக்கும் படத்தின் கதைக்கும் துளிக் கூட தொடர்பில்லை" என்று கூறுகிறார் முருகதாஸ். Other News


ARMurugdoss clears the air

Sivakarthikeyan follows Rajini formula

Ajiths impressive lineup of films

Cheran refutes rumors linking him to a political party

ARMurugdoss clears the air

Copyright 2016 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Latest Videos

Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2016 IndiaGlitz.com. All rights reserved.