1. தமிழ்
  2. తెలుగు
  3. മലയാളം
  4. Hindi
  5. Tamil
  6. Telugu
  7. Malayalam
  8. Kannada

சிம்புஹன்ஸிகா காதல் முறிந்தது

IndiaGlitz [Wednesday, February 26, 2014]
Comments

ஊடகங்களில் கடந்த சில வாரங்களாக முணுமுணுக்கப்பட்டுவரும் செய்தி உண்மையாகிவிட்டது. இளம் நட்சத்திரங்கள் சிலம்பரசனும் ஹன்ஸிகாவும் தங்கள் காதலை முறித்துக் கொண்டுவிட்டார்கள். ஹன்ஸிகாவுடன் தான் காதலில் இல்லை என்று சிம்பு தன் டுவிட்டர் பக்கத்தில் இன்று உறுதி செய்துவிட்டார்


கடந்த ஆண்டு சிம்புவும் ஹன்ஸிகாவும் தங்கள் காதலை உறுதி செய்தனர். திடீரென்று பாண்டிராஜ் சிம்புவை வைத்து இயக்கும் படத்தில் சிம்புவின் முன்னாள் காதலி நயன்தாரா ஒப்பந்தமானார். இது ஹன்ஸிகாவுக்குப் பிடிக்கவில்லை.என்று செய்திகள் வெளியாகின. அவர்கள் காதல் அவ்வளவுதான் என்று வதந்திகள் பரவின.

ஃபிப்ரவரி 3 அன்று சிம்புவின் பிறந்தநாளை இருவரும் இணைந்து  கொண்டாடி வதந்திகளைப் பொய்யாக்கினார்கள். சிம்புவும் அதற்கு பிறகு அளித்த ஒரு பேட்டியில் 'ஹன்ஸிகா என் காதலி,; நயன்தாரா என் தோழி' என்று சொல்லியிருந்தார்.

 

இந்நிலையில் ஃபிப்ரவரி 14 அன்று தனியாளாக இருக்கும் தோழிகளுடன் காதலர் தினத்தைக் கொண்டாடுவதாக ஹன்ஸிகா டுவீட்டர் பதிவிட்டிருந்தார். மீண்டும் வதந்திகள் பரவ ஆரம்பித்தன. அண்மைய பேட்டி ஒன்றில் சிம்புவடனான உறவு குறித்து சரியான நேரத்தில் அறிவிப்பேன் என்று கூறியிருந்தார் ஹன்ஸிகா.


அதற்குள் சிம்பு முந்திவிட்டார். "நான் இந்தக் காதலில் அளவுக்கதிகமாக (இன்னல்களை) அனுபவித்துவிட்டேன். இனி நான் தனியாள். எனக்கும் ஹன்ஸிகாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. வழக்கம்போல் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருக்கிறேன்" என்று தன் டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார் சிம்பு.

 

சிம்புவும் ஹன்ஸிகாவும் இணைந்து வாலு, வேட்டை மன்னன் ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
Simbu confirms his relationship status

Copyright 2017 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 Simbu confirms his relationship status
 Kamal's voice for the Nation's cause
 'Tamil film Industry has lost 200 crores'- Keyaar
 'Kaaviya Thalaivan' First Look
 Vikram to introduce something new in AI
 Adding soul to music Swarnalatha
 Is Kajal heading for a wedlock?
 12 films releasing on 28th Feb
 Another hero croons for DImman
 Nayans fight with Jayam Ravi
 Manisha misses Dhanush but
 கதை இதுவல்ல ஏஆர்முருகதாஸ் தரும&#
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2017 IndiaGlitz.com. All rights reserved.