1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

ரஜினியுடன் ஜோடி அனுஷ்கா?

IndiaGlitz [Tuesday, March 04, 2014]
Comments

ஏப்ரலில் வெளியாக இருக்கும் கோச்சடையான் படத்துக்கான தன் பணிகளை முடித்துக் கொடுத்துவிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் தன் அடுத்த படத்தைத் தொடங்க இருக்கிறார். பல்வேறு காரணங்களால எந்திரனுக்கு கோச்சடையானுக்கும் மூன்றாண்டுகளுக்கு மேல் இடைவெளி ஏற்பட்டுவிட்டதே இதற்கான காரணம்.

 

Rajini with anuska

ரஜினியின் அடுத்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார்தான் இயக்குவார் என்று சிலர் உறுதியாகச் சொல்கிறார்கள். 1995இல் முத்து, 1999இல் படையப்பா என சூப்பர்ஸ்டாரை வைத்து இரண்டு மாபெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்த ரவிக்குமார் அதற்குப் பின் ஜக்குபாய் என்ற படத்தை ரஜினியை வைத்து இயக்குவதாக இருந்தார். ஆனால் ரஜினி அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனது.

 

எந்திரன் வெளியான பிறகு ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பதாக் ஐருந்த ராணா என்ற படத்துக்கு பூஜை போடப்பட்டது. ஆனால் அந்தப் படத்தின் பூஜை அன்றே ரஜினியின் உடல்நிலை மோசமடைந்ததால் அந்தப் படம் கைவிடப்பட்டது. கோச்சடையான படத்துக்கு ரவிக்குமார் கதை, திரைக்கதை வசனம் எழுதினாலும் இயக்குபவர் ரஜினியின் மகள் சவுந்தர்யாதான்.

 

இதுபோன்ற தவிர்க்க முடியாத காரணங்களுக்காக ரவிக்குமாரை காக்க வைத்துவிட்ட ரஜினி இந்த முறை அவரது இயக்கத்தில் நடித்தே தீருவது என்று நினைப்பதாகச் சொல்கிறார்கள். மேலும் ரவிக்குமார் இயக்கப்போகும் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்காவை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வருகின்றன.  

தனனை வைத்து சிவாஜி, எந்திரன் ஆகிய வெற்றிப் படங்களை வழங்கிய ஷங்கரிடமும் கதை கேட்டிருக்கிறாராம் ரஜினி. 

 
What is Vijays next?

Copyright 2017 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 What is Vijay's next?
 Kamal's Michel Angelo connection
 Prashant to replace Vijay Antony
 Details on Balaji Sakthivel's next
 Neetu Chandra accuses Popular hero of carrying guns on sets
 More interesting additions to Uthama Villain
 Hansika bereaved
 Reason for Lakshmi Menons absence
 Reason for Captains Singapore visit
 Jayam Ravis plea to audience
 Rahman is not only the composer for Kochadiiyaan
 Vishal is Indran
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2017 IndiaGlitz.com. All rights reserved.