1. தமிழ்
  2. తెలుగు
  3. മലയാളം
  4. Hindi
  5. Tamil
  6. Telugu
  7. Malayalam
  8. Kannada

திருஷ்யம் படத்தில் கவுதமி?

IndiaGlitz [Wednesday, March 05, 2014]
Comments

மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன திருஷ்ய படத்தின் தமிழ் பதிப்பில் உலக நாயகன் கமலஹாசன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானவுடன் அந்தப் படத்தில் நாயகியாக நடிக்க இருப்பவர் யார் என்ற ஊகங்களும் செய்திகளாக வரத் தொடங்கிவிட்டன.


மலையாளத்தில் மோகன் லாலுக்கு ஜோடியாக மீனா நடித்தார். அவரே தெலுங்கு பதிப்பில் வெங்கடேஷுடன் நடிக்கிறார். திருஷ்யம் படத்தின் கன்னட பதிப்பில் ரவிசந்திரனுடன் நடிக்கவும் மீனாவை கேட்டார்கள். ஆனால் தெலுங்கு படம் தொடங்கிவிட்டதால் கன்னடத்தில் நடிக்க முடியவில்லை.

kamal-gauthami in drishyam

 

ஆனால் தமிழ் பதிப்பின் படப்பிடிப்பு கமலஹாசன் உத்தம வில்லன் படத்தை முடித்தபின்தான் தொடங்கும் என்பதால் அதில் மீனா நடிப்பார் என்று முதலில் கூறப்பட்டது.. சில நாட்களில் 80களில் புகழ்மிக்க கதாநாயகியாக இருந்தும் இதுவரை கமலுடன் ஜோடியாக நடித்திராத நதியா நடிப்பார் என்று கூறப்பட்டது. அதன் பின் சிம்ரன் பெயரும் அடிபடுகிறது.

இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்ததுபோல் ஒரு செய்தி இன்று வெளியாகியுள்ளது. அதாவது திருஷ்யம் தமிழ் ரீமேக்கில் தன்னுடன் இவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கமல் விரும்பும் நடிகை ஒருவர் இருக்கிறாராம். அவர் வேறு யாருமல்ல...கமலின் வாழ்க்கை துணையும் 90களின் முன்னணி கதாநாயகியுமான கவுதமிதான்.

 

திருஷ்யம் படத்தைப் பார்த்து வியந்து பாராட்டியவர்களில் கவுதமியும் ஒருவர். இதுவே இந்தப் படத்தில் அவரை நடிக்க வைக்கலாம் என்று கமலை நினைக்க வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

 

கமலின் இந்த விருப்பம் நிறைவேறினால் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சிதான்.
Kochadiiyaans China connection

Copyright 2017 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 Kochadiiyaan's China connection
 Anjali rues at rumors
 Mounika questions Bala's highhandedness
 Kamal's choice for heroine of Drishyam remake?
 Famous Tamil actor to act in Russian film
 Lakshmi Menon clarifies on liplock scene
 Simbu and Hansika still cordial
 Vedhikas most challenging role
 Vijay Sethupathi starts in Kodaikkanal
 Kochadiiyaan Track list
 What is Vijays next?
 Kamals Michel Angelo connection
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2017 IndiaGlitz.com. All rights reserved.