1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

நடுவில் வந்தது நடுவிலேயே போச்சு

IndiaGlitz [Saturday, March 08, 2014]
Comments

நடுவில் வந்த ஒரு பிரச்சனை, நடுவிலேயே போச்சு என்பது போல அமைந்திருக்கிறது கோச்சடையான் விளம்பரம். இதனால் யாருக்கு நிம்மதியோ இல்லையோ... ரஜினிக்கும் தனக்குமான உறவு இன்னும் அதே பொலிவோடுதான் இருக்கிறது என்பதை நிரூபித்த விதத்தில் நிம்மதியாகியிருக்கிறார் கே.எஸ்.ரவிகுமார். கோச்சடையான் படம் தயாராக துவங்கிய நேரத்திலிருந்தே படத்தின் மிக முக்கியமான வேலைகளுக்கு உடனிருந்து உதவி செய்து கொண்டிருக்கிறார் அவர். ஆனால் திடீரென இந்த படத்தின் வேலைகளில் பங்கெடுக்க துவங்கினார் இயக்குனர் மாதேஷ். இவ்விரு இயக்குனர்களுக்கு நடுவில் ஈகோ இல்லையென்றாலும், மீடியாக்களில் வெளியான ஒரு செய்தி பிரச்சனையை உருவாக்கியது.

Ks ravikumar about rajni

 

டைட்டில் கார்டில் மாதேஷ் பெயருக்கு தரப்பட்டிருக்கிற முக்கியத்துவம், கே.எஸ்.ரவிகுமாருக்கு இல்லை என்றது அந்த செய்தி. இது தொடர்பாக கே.எஸ்.ரவிகுமாருக்கும் சௌந்தர்யாவுக்கும் நடுவில் மனஸ்தாபம் என்றெல்லாம் எழுதினார்கள். ஆனால் இன்று வெளியாகியிருக்கும் விளம்பரங்களில் கே.எஸ்.ரவிகுமாரின் பெயரை முதலில் அச்சிட்டு அவருக்கு பிறகுதான் மாதேஷ் பெயரை அச்சிட்டிருக்கிறார்கள். இந்த வரிசைக்கிரமம், இந்த வதந்தியிலிருந்த சிரமத்தை பெருமளவு நீக்கியிருக்கிறது என்பதே உண்மை. Other News


Aamir Khan is third after DrManmohan and Mukesh Ambani

Priya Anand clears the air on her relationship with Atharva

Kajal seeks quality rather than quantity

Soundharya confirms the chief guest of Kochadiiyaan audio launch

Aamir Khan is third after DrManmohan and Mukesh Ambani

Copyright 2016 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 Aamir Khan is third after DrManmohan and Mukesh Ambani
 Priya Anand clears the air on her relationship with Atharva
 Kajal seeks quality rather than quantity
 Soundharya confirms the chief guest of Kochadiiyaan audio launch
 Bollywood scriptwriter to work in Ajith film
 One at a time for Ajith
 Dhanush hits the clap for Sivakarthiekyan
 Good news from Nimirndhu Nil team
 SimbuHansika love break up has found a mourner
 Vaalu falls prey to piracy
 Famous lyricist recognizes the writing skills of Superstar
 Soori saves National award winning actors life

Latest Videos

Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2016 IndiaGlitz.com. All rights reserved.