1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

உத்தமவில்லன் சர்ச்சை கமலஹாசனின&

IndiaGlitz [Thursday, March 13, 2014]
Comments

கமல் படங்களுக்கு சர்ச்சைகள் புதிதல்ல. ஆனால் ஆனால் அவர் இப்பொது நடித்துக்கொண்டிருக்கும் உத்தம வில்லன் படத்தைப் பொறுத்தவரை தொடங்கும்போதே சர்ச்சை கிளம்பிவிட்டது. படத்தின் முதல் போஸ்டரால் ஏற்பட்ட சர்ச்சை அது.


Kamal Hassan In Uthama Villain

ஃப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த புகைப்படக்காரர் ஒருவர் கேரளக் கலை மரபில் பிரபலமான தெய்யம் என்ற நடனத்தைக் குறிக்கும் புகைப்படத்தை எடுத்திருததாகவும் அதை கமல் தன் படத்தின் போஸ்டருக்கு காப்பியடித்துவிட்டார் என்றும் பலர் கடுமையாக விமர்சித்தார்கள். மும்பையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்புய் ஒன்றில் கமல் கொடுத்த விளக்கம் அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்து


உத்தம வில்லன் படத்தில் நாயகனாக நடிப்பதோடு கதை திரைக்கதையையும் எழுதியிருக்கும் கமல், "தெய்யம் என்பது 1000 ஆண்டுகள் பழமையான கலைவடிவம். என் படத்தின் கதைப்படி தெய்யம் நடனத்தையும் தமிழகத்தின் கூத்து மரபையும் கலந்து புனையப்பட்ட ஒரு காட்சி இடம்பெறுகிறது. பலர் நினைப்பதுபோல் போஸ்டரில் இருப்பது முகமூடி அல்ல. தெய்யம் கலைஞருக்கான ஒப்பனை என் முகத்தில் போடப்பட்டுள்ளது. கடினமான அந்த பணிக்கு தெய்யம் கலைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரைப் பயன்படுத்தியிருக்கிறோம். தெய்யம் ஒப்பனைக்கு 4 மணி நேரங்கள் ஆனது. இந்தப் படத்தின் போஸ்டரை ஃப்ரென்சுக்காரரின் தெய்யம் புகைப்படத்திலிருந்து காப்பியடித்தேன் என்று சொல்வது காதலர்கள் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்துகொண்டு ஒரே திசையில் பார்ப்பதை ஏக் துஜே கேலியே படத்தின் போஸ்டரிலிருந்து காப்பியடித்தது என்று சொல்வதைப் போன்றது" என்றார்.

 

படத்தின் தலைப்பு குறித்த உண்மையையும் உடைத்திருக்கிறார் கமல். "தலைப்பில் உள்ள 'வில்லன்' என்ற வார்த்தைக்கு வில்லாளி என்றும் அர்த்தம்கொள்ளலாம்" என்றார் அவர் .


உத்தம வில்லன் படத்தை இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும் கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸும் இணைந்து தயாரிக்கின்றன. கமலுடன் நிறைய படங்களில் இணைந்து நடித்தவரும் அவரது நெருங்கிய நண்பருமான ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். இளம் இசையமைப்பாளர் கிப்ரான் இசையமைக்கிறார்.

 

பார்வதி மேனன், ஜெயராம். ஊர்வசி, இயக்குநர் கே.பாலச்சந்தர், விவேக்,ஆகியோர் கமலுடன் இணைந்து நடிக்கிறார்கள்.  
Parthepan to work with Dhanush

Copyright 2017 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 Parthepan to work with Dhanush
 All actors are my friends-Goundamani
 Double roles that required doubled efforts part 2
 Double roles that required doubled efforts part 1
 Mani Ratnams next to start soon
 Nandhita to act with Vijay Sethupathi again
 Namithas enters politics
 Cuckoo is clean
 Sivamanis first film album on Tamil New year
 Shankars prediction on Maan Karate audio
 SSN Instincts 2014
 Priya Anand mobbed during shoot
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2017 IndiaGlitz.com. All rights reserved.