1. தமிழ்
  2. తెలుగు
  3. മലയാളം
  4. Hindi
  5. Tamil
  6. Telugu
  7. Malayalam
  8. Kannada

இளம் இயக்குநர்களை பாராட்டிய மணி&

IndiaGlitz [Friday, March 14, 2014]
Comments

காதலில் சொதப்புவது எப்படி என்ற வெற்றிப்படத்துடன் அறீமுகமான பாலாஜி மோகனன் இயக்கும் இரண்டாவது படம் வாயை மூடி பேசவும். மலையாள திரையுலக சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் மற்றும் நடிகை நஸ்ரியா நஸீம் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஸீன் ரோல்டன் என்ற புதியவர் இசை அமைத்திருக்கிறார். ஸீன் ரோல்டன்ம் திரையுலகுக்குத்தான் புதியவர் . ஆர், ராகேவந்திரா என்ற அவரது இயற்பெயர் பெயர்  கர்நாடக இசையுலகில் பிரபலம். இவரது தந்தை மிருதங்க வித்வான் ஸ்ரீமுஷ்ணம் வி.ராஜாராவ், தமிழின் மிகச் சிறந்த சரித்த நாவலாசிரியராக அறியப்படும் சாண்டில்யனின் மகள் வழிப் பேரன் இவர்.

Mani Ratnam

 

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. மூத்த இயக்குநர் மணிரத்னம் ஒலிநாடாவை வெளியிட தெல்ங்கு நட்சத்திரம் ராணா டகுபதி பெற்றுக்கொண்டார். படத்தின் ட்ரைலரை இயக்குநர் செல்வராகவன் வெளியிட்டார்.

 

விழாவில் பேசிய மணிரத்னம், "பாலாஜி மோகனுக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. நான் சினிமாவுக்காக நான் பார்த்துக்கொண்டிருந்த வேலையை உதறினேன். என் குடும்பத்தார் என் முடிவுக்கு துணை நின்றார்கள். பாலாஜியும் எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவில் நுழைந்து சாத்தித்திருக்கிறார்" என்றதோடு இன்றைய இளம் இயக்குநர்கள் முற்றிலும் மாறுபட்ட கதையம்சங்களைப் படமாக்குவது தனக்கு மகிழ்ச்சி அளித்திருப்பதாகப் பாராட்டினார். மேலும் மம்முட்டியை தளபதி படத்தில் இயக்கிவிட்டு அவரது மகன்  துல்கர் நடித்த படத்தின் விழாவுக்கு வந்திருப்பதையும் நினைவுகூர்ந்தார்.

 

எந்த விழாவிலும் அதிகம் பேசாத மணி ரத்னம் இந்த விழாவில் இந்த அளவு பேசியதிலேயே வாயை மூடி பேசவும் படத்தையும் அதில் பணியாற்றுபவர்களையும் அவருக்குப் பிடித்துவிட்டது என்பதைக் காண்பித்தது. 
Mani Ratnam appreciates young directors

Copyright 2017 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 Mani Ratnam appreciates young directors
 'Balaji Mohan has a keen music sense' - Sean Roldan
 Famous Politician meets Superstar
 Udhayandhi proves his sense of responsibility
 Vijay and Murugdoss start their fourth
 Man Karate to wrap up today
 Vishakas swet teeth leaves the Vaaliba Raja unit stunned
 Karthik Raja not happy with Yuvans decision
 A precious reward for Director Ram
 Vishal knows how it feels to life as a woman
 Kamal & Sruthis effort to bridge south and north east
 Superstar appreciates Naan Sigappu Manidhan
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2017 IndiaGlitz.com. All rights reserved.