1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada
IG Bannner
News

ஜெயா டிவியில் வடிவேலு

IndiaGlitz [Wednesday, April 09, 2014]
Comments

வருகிற ஏப்ரல் 14 ந் தேதி புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு முன்னணி நடிகர் நடிகைகளின் பேட்டிக்காக எல்லா சேனல்களும் மெனக்கட்டு கொண்டிருக்க, சட்டென இரு பெரும் ஸ்டார்களை தங்கள் சேனலுக்காக களம் இறக்குகிறது ஜெயா டி.வி. பல வருடங்களாக டி.வி க்கு பேட்டியே கொடுக்காத ரஜினியை தங்கள் சேனலுக்காக பேச வைத்திருப்பது யாவரும் அறிந்த விஷயம்தான். ரஜினியை நடிகர் விவேக் பேட்டி எடுத்திருக்கிறார். இதுதான் புத்தாண்டு நிகழ்ச்சிகளிலேயே எல்லாரையும் கவனிக்க வைக்கிற நிகழ்ச்சியாக இருக்கும். அப்படியே இன்னொரு பெரிய விஷயத்தையும் செய்துவிட்டது ஜெயா டி.வி.

ஜெயா டி.வியில் வடிவேலு

 

திமுக வுக்கு ஆதரவாக சட்டமன்ற தேர்தலில் வாக்கு சேகரிக்க கிளம்பிய வடிவேலு மீது கோபமாக இருந்தார்கள் அல்லவா? அந்த கோபத்தை மறந்து அவரது பேட்டியை ஒளிபரப்பவிருக்கிறார்களாம். முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் இளையராஜா ரஜினி கமல் உள்ளிட்ட பெரும் ஜாம்பவான்கள் கலந்து கொண்டார்கள். அப்போதே வடிவேலுவுக்கும் இன்விடேஷன் போனது. ஆனால் அவர்தான் சில தவிர்க்க முடியாத காரணங்களால் செல்லவில்லை. இந்த நிலையில் தெனாலிராமன் படத்திற்கு ஆளுங்கட்சியால் தடை ஏற்படுமோ என்று கலங்கிக் கொண்டிருந்த விநியோகஸ்தர்களே ஆச்சர்யப்படும்படி நடந்திருக்கிறது இந்த சம்பவம்.  வடிவேலுவை அழைத்த தொலைக்காட்சி அதிகாரிகள் நம்ம டி.விக்கு ஒரு பேட்டி கொடுங்க என்று நேரில் வரவழைத்து ஒளிப்பதிவு செய்தார்களாம். பொதுவாக ஜெயா தொலைக்காட்சியில் இடம் பெறும் முக்கியமான நிகழ்ச்சிகள், முதல்வர் ஜெ. வின் ஒப்புதல் இல்லாமல் நடைபெறாது. அப்படியென்றால்? 
Rajini recommends this cinematographer


Copyright 2015 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.

Other News

 Someone is threatening Suriya
 Gautham Menon Confirms his Next Hero
 Simbu's Brother Denies rumors about Anirudh
 Kamal Haasan's 'Ullen Ayya'
 RGV's 'Killing Veerappan' First Look Poster
 Special Day for D.Imman
 What awaits Vikram and Samantha in Bulgaria?
 Suriya in 'Sathuranga Vettai2'?
 Wedding Anniversary Wishes to Ajith and Shalini
 Vikram Prabhu in Rajini's Film
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2015 IndiaGlitz.com. All rights reserved.