1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

ஆரம்பம் அப்புறம்தான்

IndiaGlitz [Thursday, March 15, 2012]
Comments

கடந்த சில வருடங்களாகவே மிகவும் சின்சியராக உருவாக்கி வந்த வழக்கு எண் 18/9 படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிவிட்டது. எவ்வித பதற்றமும் இல்லாமல் இந்த படத்தை எடுக்க உதவியதாக தயாரிப்பாளர் லிங்குசாமியை பாராட்டிக் கொண்டிருக்கிறார் அப்படத்தின் டைரக்டர் பாலாஜி சக்திவேல். படப்பிடிப்புக்கு போவதும் ஆபிசுக்கு வருவதுமாக இருந்தாராம் பாலாஜி. இருந்தாலும் தயாரிப்பாளருக்கு படத்தை போட்டுக் காட்ட வேண்டும் என்ற நினைப்பு இருக்குமல்லவா? ஒவ்வொரு முறையும் லிங்குசாமியை பார்க்கும் போதெல்லாம் அந்த சங்கடம் வந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாத பாலாஜி, ஒரு நாள் அவரை அழைத்து சொல்லியே விட்டாராம். இந்த படத்தின் கதை நல்லா வந்திருக்கு. ஆனால் ஓப்பனிங் என்ன என்பதை இன்னும் நான் முடிவு செய்யவே இல்லை. அதை நல்லபடியா எடுத்து முடித்ததும் உன்னிடம் காண்பிக்கிறேன் என்றாராம். பாலாஜி சக்திவேல் ஷங்கரிடம் அசிஸ்டென்ட் டைரக்டராக இருந்த காலத்திலிருந்தே இருவரும் நல்ல நண்பர்கள் என்பதால் இந்த சிறுசிறு சங்கடங்கள் பெரிதாக தெரியவே இல்லை இருவருக்கும். காதல் படத்தையே கூட லிங்குசாமிதான் தயாரிப்பதாக இருந்தது. அது ஜஸ்ட் மிஸ். ஆனால் காதல் படத்திற்கு குறைவில்லாத இன்னொரு படமாக இந்த வழக்கு எண் இருக்கும் என்றார் பாலாஜி. நம்புறோம்ங்க...Other News


Vishal I didnt act in Avan Ivan for awards

Rajini croons for Kochadaiyaan!

Arya clears air on his remuneration hike

Maatraan out beats Rajinis Kochadaiyaan!

Vishal I didnt act in Avan Ivan for awards

Copyright 2016 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 Vishal I didnt act in Avan Ivan for awards
 Rajini croons for Kochadaiyaan!
 Arya clears air on his remuneration hike
 Maatraan out beats Rajinis Kochadaiyaan!
 Livingston in a 3D flick!
 Puthiya Thiruppangal Latest tidbits
 Prakash Raj walks out of Spirit
 Producers cry foul again
 Kamal Kushboo & Kathak
 Andrea in love?
 Sneha is Prasannas Kannamma
 Ash Abhishek christen Beti B!
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2016 IndiaGlitz.com. All rights reserved.