Follow us on
 
 
  1. Hollywood
  2. Hindi
  3. Tamil
  4. Telugu
  5. Malayalam
  6. Kannada

கவுதம் தயாரிப்பில் ஜெய்

IndiaGlitz [Friday, March 30, 2012]
Comments

தமிழ்சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார் கவுதம் மேனன். ஆனால் அவரது தாய் மொழியான மலையாளத்தில் இன்னும் படங்கள் எதுவும் அவர் இயக்கியதில்லை. இந்த ஏக்கம் அவருக்கும் மலையாள ரசிகர்களுக்கும் கூட இருந்திருக்கும். அதை போக்கும் விதத்தில் வந்திருக்கும் நல்ல செய்தி இது. விரைவில் ஒரு மலையாள படத்தை இயக்கப் போகிறாராம் கவுதம். இதற்கிடையில் அவர் இயக்கிக் கொண்டிருக்கும் நீதானே என் பொன் வசந்தம் படத்தையும் தனது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டாராம் அவர். முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தை தயாரித்த எல்ரெட் குமார்தான் இப்படத்தை  தயாரித்து வந்தார். தற்போது இந்த படத்திற்கு கவுதமே தனி தயாரிப்பாளர் ஆகியிருப்பதாக தகவல். இந்த படம் மட்டுமல்ல, அவர் மேலும் சில புது இயக்குனர்களுக்கும் வாய்ப்பளிக்க முடிவெடுத்திருக்கிறாராம். இவரது கம்பெனிக்காக தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பவர் நடிகர் ஜெய். கவுதம் தயாரிப்பு என்றதும் சம்பள நிபந்தனைகள் எதுவும் இல்லாமல் ஒப்புக் கொண்டாராம்  ஜெய். 



 ரஜினி பட சுவாரஸ்யங்கள்



Other NEws

ரஜினி பட சுவாரஸ்யங்கள்

Read More »



Copyright 2013 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.

Other News

 Samantha Looking for Small Films
 'Dhruva Natchathiram' Heroine?
 Latest on Sid-Sam
 Rajinikanth makes Dhanush nervous
 Dia Mirza and Water Tax Dispute
 Happy Birthday Kajal
 Vijay Ebenezer on 'Ya Ya' Music
 SJ Suriyah Suspense in 'Villa'
 Sivakumar Family in Kumbhabhishekam
 'Madha Gaja Raja' Releasing July
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright © 2013 IndiaGlitz.com. All rights reserved.