|
தனக்கு கல்யாண வயசு வந்ததையே கூட சில நடிகைகளின் மனசு ஒப்புக் கொள்ளாது. ஆனால் அந்த விஷயத்தில் ப்ரியா ஆனந்த் கிரேட். இதுவரை காதலில் விழாத இவர், கல்யாணத்திற்கு மாப்பிள்ளை பார்க்க தயாராகிவிட்டாராம். 180 படத்தின் டைரக்டர் ஜெயந்திராவை வெறும் டைரக்டராக மட்டும் பார்க்கவில்லை இவர். ஒரு அப்பா ஸ்தானத்தில் வைத்து பார்க்கிறார். அதனால்தான் தனக்கு மாப்பிள்ளை பார்க்க சொல்லி அவரிடம் சொல்லியிருக்கிறாராம். என்னுடைய வெல் விஷர்னா அவர்தான். எப்பவும் எனக்கு நல்லது செய்யணும்னு நினைக்கிறவர். அதனால்தான் அவரிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்தேன் என்கிறார் ப்ரியா ஆனந்த். ஒருபுறம் இந்த முயற்சிகள் போய் கொண்டிருந்தாலும் இவரது சினிமா பயணமும் வெகு வேகமாக போய் கொண்டிருக்கிறது. இந்தியில் சீனிகம், ப படங்களை தொடர்ந்து பிரபல இயக்குனர் பால்கி இயக்கும் இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற படத்தில் முக்கியமான கேரக்டர் இருக்கிறதாம் இவருக்கு. இதில் அந்தகால ஸ்ரீதேவியும் நடிக்கிறார் என்பதுதான் ப்ரியா ஆனந்தின் இரட்டிப்பு சந்தோஷம்.
|