1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

Jai Nazriya in Love ? (தமிழ்)

IndiaGlitz [Monday, July 15, 2013]
Comments

கோலிவுட்டின் அடுத்த காதல் ஜோடி ஜெய்-நஸ்ரியா..!


கோலிவுட்டின் இப்போதைய ஹாட் டாப்பிக் ஜெய்-நஸ்ரியா ஜோடியைப்பற்றிதான். இந்த ஜோடி 'திருமணம் என்னும் நிக்கா' படத்தில் ஜோடியாக நடிக்கிறது. இதில் என்ன ஹாட் இருக்கிறது என்கிறீர்களா...

விஷயமே அதில்லை... 'நேரம்' படம் முலம் அறிமுகம் ஆன நஸ்ரியாவுக்கு அந்த படம் கொடுத்த மெகா ஹிட் தமிழ் சினிமாவில் வளரும் நாயகிகளில் நஸ்ரியாவுக்கு முதல் இடத்தை தந்தது. அதன் காரணமாக தனுஷ் ஜோடியாக 'நையாண்டி' படத்தில் ஒப்பந்தம் ஆனார்.

அதன்பிறகு 'திருமணம் என்னும் நிக்கா' படத்திலும், 'ராஜா ராணி' படத்திலும் ஒப்பந்தம் ஆனார். இந்த படங்களின் படப்பிடிப்போது ஹீரோக்களோடு சகஜமாக பழகுவது ஹீரோயின்களுக்கு புதிதில்லைதான்.


அதேநேரம், 'திருமணம் என்னும் நிக்கா' படத்தின் ஹீரோ ஜெய்யுடன் நடிக்கும்போது அவரோடு ஏற்பட்ட பழக்கம் மிக நெருக்கமாக... ஷூட்டிங் நேரங்கள் தாண்டியும் பழக்கம் தொடர... இதே இப்போது 'கோலிவுட்டின் அடுத்த காதல் ஜோடி' என தலைப்பு வைத்து செய்தி போடும் நிலையை உருவாக்கியிருக்கிறது.

ஏற்கனவே, ஜெய்யுடன் இணைத்து பேசப்பட்டவர் அஞ்சலி. இவர்கள் ஜோடியாக நடித்த 'எங்கேயும் எப்போதும்' படத்தின் போது இவர்களுக்குள் கெமிஸ்ட்ரி... ஹிஸ்ட்ரி எல்லாம் ஒர்க்கவுட் ஆகி இருவரும் காதலிக்கிறார்கள் என்றெல்லாம் பரபரப்பான செய்தியானது. அதை வழக்கமான சினிமாகாரர்கள் போல இவர்களும் மறுத்தார்கள்.

என்ன நடந்ததோ அத்தனை நெருக்கமாக இருந்த ஜெய்-அஞ்சலி ஜோடி திடீரென பிரிந்து 'எங்களுக்குள் காதல் எதுவும் இல்லை... நாங்கள் ஜஸ்ட் நண்பர்கள்தான்' என ஸ்டேட்மெண்ட் விட்டு அவரவர் பாதையில் சென்றார்கள்.

இப்போது, ஹீரோயின்களில் திடீர் மவுசு ஏற்பட்டிருக்கிற நஸ்ரியாவுடன் ஜெய் நெருக்கம் காதலாகி கோடம்பாக்கம் முழுக்க கிசுகிசுக்கப்படுகிறது. இந்த கிசுகிசுவை வழக்கம்போல இருவரும் மறுக்காமல் அமைதி காக்கிறார்கள். 

இந்த காதலில் விழுவதற்கு முன்பு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சரியான நேரத்தில் வரும் நஸ்ரியா... இப்போதெல்லாம் டைரக்டர் தேடும் நிலையில் அடிக்கடி மாயமாகிவிடுகிறாராம்.

அதோடு, சற்குணம் இயக்கும் தனுஷின் 'நையாண்டி' படத்திற்கு தந்த கால்ஷீட் தேதிகளை 'திருமணம் என்னும் நிக்கா' படத்திற்கும், அந்த படத்திற்கு கொடுத்த தேதிகளை 'ராஜா ராணி' படத்திற்கும் கொடுத்து பெரும் கால்ஷீட் சொதப்பல் செய்ய... பஞ்சாயத்தாகியிருக்கிறது. கடைசியில் ஏற்கனவே கொடுத்த தேதிகளை மாற்றாமல் 'நையாண்டி' படத்தில் நடிக்க நஸ்ரியா ஒப்புக் கொண்டு ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்த கால்ஷீட் சொதப்பல்களும் காதலில் விழுந்ததால் ஏற்பட்டதுதான் என்பது விவரம் அறிந்த வட்டாரங்களின் தகவல்.

எது எப்படியோ... கோலிவுட்டில் இப்போதைய இளம் காதல் ஜோடியாக வலம் வருகிறது இந்த ஜோடி..!Suriya as Doctor in Linguswamy Movie

Copyright 2017 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2017 IndiaGlitz.com. All rights reserved.