1. தமிழ்
  2. తెలుగు
  3. മലയാളം
  4. Hindi
  5. Tamil
  6. Telugu
  7. Malayalam
  8. Kannada

Controversy hits Thalaivaa makers for music royalty (தமிழ்)

IndiaGlitz [Tuesday, July 16, 2013]
Comments

 'தலைவா' இசை ராயல்டி சிக்கலா..?!

 
விஜய் நடிக்கும் 'தலைவா' படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், பாடலாசிரியர்கள் மதன்கார்க்கி, முத்துகுமார், தாமரை ஆகியோருக்கும் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினுக்கும் திடீர் மோதல் ஏற்பட்டிருக்கிறது.

'தலைவா' படத்தின் ஆடியோ உரிமையை பிரபல ஆடியோ நிறுவனம் வாங்கியிருக்கிறது. இந்த நிறுவனம் வழக்கமாக எந்த படத்தின் ஆடியோ உரிமையை வாங்கினாலும் இசை, பாடல் உட்பட அனைத்து டிஜிட்டல் உரிமைகளையும் வாங்கிக் கொள்ளும். அதோடு, 'யூ டியூப்' மூலம் ரசிகர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தயாரிப்பாளருக்கு ராயல்டி தொகை வழங்குவோம் எனவும் கூறுவார்கள்.

இந்த சூழலில், விஜய் நடிக்கும் 'தலைவா' படத்தின் ஆடியோ உரிமையை பெற்ற பிரபல இசை நிறுவனமும், வழக்கமான பாணியில் இசையின் உரிமை முழுவதும் தனது நிறுவனத்திற்கு சொந்தம் என சொல்லும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடும்படி படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷிடம் கேட்டுக் கொண்டது. ஆனால், அப்படி கையெழுத்து போட ஜி.வி. மறுத்து விட்டார்.

இதேபோல, பாடல் உரிமைகளையும் அந்த நிறுவனத்திற்கு எழுதி தரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட பாடல் எழுதிய மதன்கார்க்கி, முத்துகுமார், தாமரை ஆகியோர் மறுத்து விட்டனர். தயாரிப்பாளர் அனுப்பிய ஒப்பந்த கடிதங்களை அவர்கள் திருப்பி அனுப்பிவிட்டனர். 

இந்த சூழலில், ஜி.வி.பிரகாஷ் தனது டிவிட்டர் வலைதளத்தில் 'இசையமைப்பவர்களின் உரிமையை இசை நிறுவனங்கள் பறிக்கக் கூடாது. அனைத்து உரிமையும் கடைசிவரை அந்தந்த இசையமைப்பாளர்களுக்குத்தான் சொந்தமாக இருக்கும்' என கருத்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
 
ஏற்கனவே, 'எனது பாடல்களை ஒளிபரப்பி காசு பார்த்தவர்கள் எனக்கு ராயல்டி தராமல் ஏமாற்றி விட்டனர் என ஒரு பிரபல இசை நிறுவனம் மீது இளையராஜா மோசடி புகார் கொடுத்தது நினைவிருக்கலாம்'. 

அதேநேரம், தயாரிப்பாளர்கள் தரப்பில் விசாரிக்கும்போது, ''படத்தில் ஒப்பந்தம் போடும்போதே இசை, பாடல் உட்பட அனைத்து உரிமைகளும் தயாரிப்பாளருக்குத்தான் சொந்தம். அதில் யாருக்கும் ராயல்டி தரவேண்டியதில்லை. பெரும்பாலும் எங்களுக்குத்தான்(தயாரிப்பாளர்கள்) தரவேண்டிய ராயல்டி தொகையை யாரும் தருவதில்லை. மற்றபடி படத்தில் பணியாற்றும் அனைவரும் அவரவர் உழைப்புக்கு ஏற்ப சம்பளத்தை பெற்றுக் கொள்கிறார்கள். கடைசியில் பரிதாப நிலையில் நிற்பது தயாரிப்பாளர்கள்தான்'' என்கிறார்கள். 

எது எப்படியோ, இப்போது விஜய் படமான 'தலைவா' ரிலீசுக்கு நெருங்கும் நிலையில் இப்படி ஒரு புகார் கிளம்பியிருப்பது சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.     Click here to read GV's Tweets



Director Shankar on Ai





Copyright 2017 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.



Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2017 IndiaGlitz.com. All rights reserved.