1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

Jilla A Cop Story ? (தமிழ்)

IndiaGlitz [Tuesday, July 23, 2013]
Comments

'ஜில்லா' போலீஸ் கதையா..?!

தமிழ் சினிமாவில் இப்போது போலீஸ் யூனிபார்ம்போட்டு நடித்தால் கலெக்ஷன் பார்த்து விடலாம்போல... சமீபத்திய போலீஸ் படங்களுக்கு ரசிகர்கள் ஆதரவு அதிகரித்திருப்பதை மறுக்க முடியாது.


சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த சிங்கம், சிங்கம்&2 படங்கள் மெகா ஹிட் ஆகி வசூலை தந்தது.


இந்த நிலையில், சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் சவுத்ரி தயாரித்து வரும் 'ஜில்லா' படத்தை நேசன் என்பவர் இயக்கி வருகிறார்.


இந்த படத்தில் காஜல்அகர்வாலுக்கு ஹீரோ விஜய் மீது காதல் வரும்.  ஏற்கனவே இந்த ஜோடி 'துப்பாக்கி' படத்தில் இணைந்து நடித்தன. இதே ஜோடி மீண்டும் 'ஜில்லா' படத்தில் ஒன்று சேர்ந்துள்ளன.


இவர்களோடு மோகன்லால், பூர்ணிமா பாக்யராஜ் என பலர் நடித்திருக்கிறார்கள்.
விஷயம் இது இல்லை....


தமிழ் சினிமாவில் சமீபத்திய போலீஸ் கதைகள் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. இந்த நிலையில், ஆவடியில் உள்ள போலீஸ் பயிற்சி கல்லூரி மைதானத்தில் நடிகர் பிரமானந்தம் தொடர்பான காட்சிகள் 'ஜில்லா'வுக்காக படமாக்கப்பட்டுள்ளன. 


ஏற்கனவே, இந்த படத்தில் விஜய் இஸ்லாமியராக நடிப்பதாக செய்திகள் வெளியானது. இப்போது போலீஸ் பயிற்சி கல்லூரியில் 'ஜில்லா' படப்பிடிப்பு நடந்துள்ளதால் விஜய்யும் காக்கி சட்டையுடன் போலீஸ் கெட்டப்பில் நடிக்கலாம் என கோடம்பாக்கம் முழுக்க பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


விஜய்யின் முந்தைய படமான 'துப்பாக்கி' படத்தில் விஜய் ராணுவ வீரராக நடித்திருப்பார்.
Biriyani is Vinayaga Chathurthi Special

Copyright 2017 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2017 IndiaGlitz.com. All rights reserved.