1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

Maryan remake rights on hold (தமிழ்)

IndiaGlitz [Tuesday, July 23, 2013]
Comments

'மரியான்' இந்தி ரீமேக் இப்போதில்லை..?!

தனுஷ் ஜோடியாக பார்வதி நடித்து சமீபத்தில் ரிலீஸ் ஆன படம் 'மரியான்' இந்த படத்தை 'வந்தேமாதரம்'இயக்கிய பரத்பாலா இயக்கியிருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். 


இந்த படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரிலீஸ் ஆனது. படம் நல்ல விலைக்கு விற்பனை ஆனாலும் தயாரிப்பாளருக்கு போட்டதை எடுப்பதே சிரமம் ஆகிப்போனது.
இந்த நிலையில், விட்டதை பிடிக்க 'மரியான்' படத்தை இந்தியில் ரீமேக் உரிமை தர தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் முடிவு செய்தார்.


சில தினங்களுக்கு முன்பு தான் இந்தியில் தனுஷ் நடித்த படம் ஹிட் ஆனது. அதேபோல, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஏற்கனவே இந்திக்கு அறிமுகம் ஆனவர்தான். வந்தேமாதரம் ஆல்பம் மூலம் இயக்குனர் பரத்பாலாவும் இந்தியில் தெரிந்த முகம்தான்.


இதை வைத்து 'மரியான்' படத்தை இந்தியில் ரீமேக் உரிமையை வழங்க தயாரிப்பாளர் முடிவு செய்தார். இது தெரிந்ததும் ஹீரோவும், இசையமைப்பாளரும், இயக்குனரும் ஆளாளுக்கு ராயல்டி தொகை கேட்டிருக்கிறார்கள். இவர்கள் கேட்கும் தொகையை விட இந்தி ரீமேக் உரிமைக்கான விலை குறைவாக இருப்பதால் ரீமேக் உரிமையை கொடுப்பதை விட நாமே வைத்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன்.
Dhanush gets Aniruth his next (தமிழ்)

Copyright 2017 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2017 IndiaGlitz.com. All rights reserved.