1. தமிழ்
  2. తెలుగు
  3. മലയാളം
  4. Hindi
  5. Tamil
  6. Telugu
  7. Malayalam
  8. Kannada

கண்கலங்கிய பாரதிராஜா

IndiaGlitz [Friday, October 04, 2013]
Comments

எப்பவுமே உணர்ச்சிவசப்பட்டு பேசும் பாரதிராஜா, பதினாறு வயதினிலே படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் மேலும் உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கிய போது மேடையிலிருந்த ரஜினியே சில சொட்டுகள் கண்ணீர் வடித்தார். 36 ஆண்டுகள் கழித்து இப்படத்தை மீண்டும் ரீ ரிலீஸ் செய்வதற்கு முன் வந்திருக்கிறார் அப்படத்தின் தயாரிப்பாளர் ராஜ்கண்ணு. இந்த விழாவில் நிறைய சுவாரஸ்யங்கள் இருந்தன. முக்கியமாக இப்படத்தின் பட்ஜெட். வெறும் நாலரை லட்சத்தில் எடுக்கப்பட்ட படம் இது என்றார் பாரதிராஜா. 28 ரோல்களில் எடுக்கப்பட்ட படமாம் இது. கமல்ஹாசனுக்கு 27 ஆயிரம் சம்பளம். அப்போது அவர் பெரிய நடிகர் என்பதால்தான் இந்த சம்பளம். படத்தில் பரட்டையாக நடித்த ரஜினிக்கு நாலாயிரம் ரூபாய் சம்பளம். பாக்யராஜ் அசிஸ்டென்டாக வேலை பார்த்த முதல் படம். இப்படி ஏராளமான தகவல்களை கொட்டிய அந்த விழாவில், தனது தாயை நினைத்துதான் கண்கலங்கினார் பாரதிராஜா. இதே கமலா தியேட்டரில் நான் இயக்கிய 'கிழக்கே போகும் ரயில்' படத்தின் 100 வது நாள் விழா நடந்தது. ஒரு சேர்ல எங்கம்மாவை கொண்டு வந்து உட்கார வச்சுருந்தேன். விழா முடிஞ்சதும் என்னம்மா?ன்னு கேட்டேன். எனக்கு இங்க பேசியது எதுவுமே கேட்கலடா. பாரதிராஜா பாரதிராஜா ன்னு எல்லாரும் உன் பேரை சொன்னது மட்டும் கேட்டுச்சு என்றார். இதை விவரிக்கும்போதுதான் பாரதிராஜாவின் கண்கள் பனித்தன.Jilla team shoots at breakneck speed

Copyright 2017 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 Jilla team shoots at breakneck speed
 Italy awaits Adarva & Priya Anand
 Jai opens up after RR success
 Get ready to hear Santhanam singing
 Arrambam First Theatre List
 Two Vijay films to feature in Russia
 Shruthi Haasan Signs For Arya
 Pathibans Next
 Myskin down to road to promote his movie
 Who Replaced Jai and Shiva?
 Gana Bala Croon for Arulnidhi
 Irony Kings Birthday
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2017 IndiaGlitz.com. All rights reserved.