1. தமிழ்
  2. తెలుగు
  3. മലയാളം
  4. Hindi
  5. Tamil
  6. Telugu
  7. Malayalam
  8. Kannada

தடங்கலுக்கு வருந்துகிறோம்

IndiaGlitz [Monday, October 14, 2013]
Comments

அஜீத்தின் ஆரம்பம் தீபாவளிக்கு வந்துவிடுமா? இதுதான் இப்போதைய பரபரப்பான கேள்வியாக இருக்கிறது. ஆனால் அதில் என்ன சந்தேகம் என்பதை போல இப்படத்தின் போஸ்ட் புரடக்ஷன் பணிகள் எவ்வளவு விரைவாக நடைபெற்று வருகிறது என்பதை மீடியாக்களுக்கு அவ்வப்போது சொல்லி வருகிறார் டைரக்டர் விஷ்ணுவர்த்தன். மியூசிக் டைரக்டர் யுவன்சங்கர் ராஜாவுடன் இணைந்து ரீரெக்கார்டிங் வேலைகளை பரபரப்பாக செய்து வருகிறார்களாம்.

இந்த படத்தில் அஜீத்தின் முழு பரிமாணம் இருக்கும் என்பது ரசிகர்களுக்கு பெரிய சந்தோஷத்தை தருகிற அதே நேரத்தில் படம் பற்றிய இன்னொரு நம்பிக்கையை தருகிறது இன்னொரு விஷயம். கே.வி.ஆனந்துடன் மட்டுமே பணியாற்றி வந்த பிரபல எழுத்தாளர்களான சுபா, இந்த முறை விஷ்ணுவர்த்தனுடன் இணைந்து டயலாக் எழுதியிருக்கிறார்கள். படத்தில் திடுக்கிடும் திருப்பங்களுக்கு ஏற்றார் போல வளைந்து ஓடியிருக்கிறதாம் இவர்களின் எழுத்து. இதற்கிடையில் படம் பற்றி வருகிற சின்ன சின்ன தடங்கல் செய்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளவும் தவறவில்லை ஆரம்பம் பட யூனிட்டை சேர்ந்தவர்கள். அவ்வளவு தடங்கல் செய்திகளுக்கு நடுவிலும் ஆரம்பம் ஒரு நாள் முன்னதாகவே ரிலீஸ் ஆகிறது என்கிற நல்ல தகவலையும் சொல்லி வருகிறார்கள். அப்படியே நடக்கட்டும்...
Vanakkam Chennai User Review

Copyright 2017 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 'Vanakkam Chennai' - User Review
 Karthi's movie to revisit title
 Rerecording for 'Arrambam' in full flow
 Jeyam Raja Debuts on Screen
 Sridevi Does it For Social Cause
 Snehan Thanks the CM
 Soodhu Kavvum Hot remake material
 Vadacurry to wrap up talkie Portions
 Twinkling Kajal on Suriya & Karthi
 Singam2 scores century
 Write Your Own Review Naiyandi
 Write Your Own Review Vanakkam Chennai
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2017 IndiaGlitz.com. All rights reserved.