close
Choose your channels

'சென்னை 28' நடிகைக்கு ஆண்குழந்தை

Friday, May 19, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியன் மகளும், சென்னை 600028', 'அஞ்சாதே' உள்பட ஒருசில படங்களில் நடித்த நடிகையுமான விஜயலட்சுமிக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர்.
'சென்னை 600028, அஞ்சாதே, சரோஜா உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை விஜயலட்சுமிக்கும், பெரோஸ் முகமது என்பவருக்கும் கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று இந்த தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.
விஜயலட்சுமி-பெரோஸ் தம்பதிக்கு கோலிவுட் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.