close
Choose your channels

இறுதிக்கட்டத்தை நோக்கி நயன்தாராவின் 'இமைக்கா நொடிகள்'

Wednesday, September 20, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களின் பட்டியலில் இடம்பெற்ற படங்களில் ஒன்று லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'இமைக்கா நொடிகள். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் முழுவேகத்துடன் நடந்து வருகிறது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஒரு கலக்கலான கதாபாத்திரத்திலும், அதர்வாவிற்கு ஜோடியாக தென்னிந்தியாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான  ராஷி கண்ணாவும் இந்த படத்தில்  நடித்துள்ளனர் . அதுமட்டுமின்றி பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இப்படத்தில் ஒரு திகிலான வில்லன்  கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இப்படத்தை 'டிமான்ட்டி காலனி' புகழ் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார்.

கேமியோ பிலிம்ஸ்' ஜெயக்குமார் இந்த பிரம்மாண்ட கமர்ஷியல் க்ரைம் திரில்லர் படத்தை தயாரித்துள்ளார். 'ஹிப் ஹாப் தமிழா' ஆதி இப்படத்திற்காக இசையமைத்துள்ளார். இவரது பாடல்களும் பின்னணி இசையும் அபாரமாக அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. 

இப்படத்தின் முதல் 'சிங்கள் ட்ராக்' கூடிய விரைவில் வெளியிடப்படவுள்ளது. R D ராஜசேகரின் ஒளிப்பதிவில் பட்டுக்கோட்டை பிரபாகரன் அவர்களின் வசனத்திலும் இப்படம் உருவாகியுள்ளது. 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.